Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
குறிகட்டுவான் இறங்குதுறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்றைய தினம் சனிக்கிழமை (09.08.25) குறிகட்டுவான் இறங்குதுறைக்கு துறைசார் அதிகாரிகளுடன் நேரடியாக விஜயம் செய்திருந்தார்.
அமைச்சருடனான விஜயத்தில் கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக செயலர் கே. சிவகரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் குரூஸ், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர்,நெடுந்தீவு பிரதேச செயலாளர், வேலணை உதவிப் பிரதேச செயலாளர், கடற்படை அதிகாரிகள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டார்கள்.