2019 ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று (ஜனவரி 7, 2026) கருத்து தொிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தாக்குதலின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான சாரா ஜாஸ்மின் (புலஸ்தினி மகேந்திரன்) இறக்கவில்லை என்பது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.. 2019 ஏப்ரல் 26 அன்று சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் சாரா ஜாஸ்மின் இறந்துவிட்டதாகக் கூறப்பட்டதை அமைச்சர் மறுத்தார். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட DNA பரிசோதனைகளில் முறையான முடிவுகள் கிடைக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.. சாரா ஜாஸ்மின் தற்போது இந்தியாவில் இருப்பதாக எந்தவொரு ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர், அவரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் “திறந்த பிடிவிறாந்து” (Open Warrant) ஒன்றைப் பெற்று, சர்வதேச மட்டத்தில் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளாா்… ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் ஏதேனும் அரசியல் சதி உள்ளதா என்பது குறித்து புதிய அரசாங்கம் மிக விரிவான மற்றும் ஆழமான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் விசாரணைகள் தற்போது மிகவும் முக்கியமான கட்டத்தில் இருப்பதால், அவற்றின் முன்னேற்றம் குறித்த அனைத்து விபரங்களையும் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக வெளியிட முடியாது என அமைச்சர் கூறினார். அவ்வாறு செய்வது குற்றவாளிகள் தப்பிப்பதற்கோ அல்லது ஆதாரங்கள் அழிக்கப்படுவதற்கோ வழிவகுக்கும் என்பதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவா் தொிவித்தாா் Tag Words: #SarahJasmine #EasterAttack #SriLankaNews #AnandaWijepala #InvestigationUpdate #JusticeForEasterVictims #BreakingNewsTamil #PulasthiniMahendran
📢 சாரா ஜாஸ்மின் இறக்கவில்லை – Global Tamil News
10
previous post