டிரம்பின் இறக்குமதி வரிகள் உலகை எவ்வாறு பாதிக்கின்றன?

23 நிமிடங்களுக்கு முன்னர்

கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல நாடுகளுக்கு “பரஸ்பர” இறக்குமதி வரியை (tariff) அறிவித்தார். இது பல நாடுகளைப் பாதித்தது. பல நாடுகளுக்கான வரிகள் இடைநிறுத்தப்பட்டாலும் இன்னும் சில நாடுகளுக்கான வரிகளின் தாக்கம் உலகளவில் உணரப்படுகிறது.

கார், ஸ்டீல் போன்ற சில பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரிகளை விதித்துள்ளது. இது சராசரி வரி வீதத்தை 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

சீனா மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்துள்ளது, ஆனால் அமெரிக்காவுக்கு அல்ல. சீனா பிரேசிலிலிருந்து சோயாபீன்களை வாங்குவது அதிகரித்துள்ளது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.அமெரிக்காவுக்கு குறைவான பொருட்களை ஏற்றுமதி செய்யும் சீனா

சீனாவின் பொருட்களுக்கு டிரம்ப் அதிக வரி (145% வரை) விதித்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவுக்கு சீனாவின் ஏற்றுமதி 11% குறைந்தது.

புதிய வர்த்தக ஒப்பந்தங்கள்

பிரிட்டனும் இந்தியாவும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஐரோப்பிய ஒன்றியம் இந்தோனீசியாவுடன் ஒப்பந்தம் செய்ய முயற்சி நடைபெறுகிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க இறக்குமதி அதிகரிப்பு

டிரம்ப் வர்த்தக போர் காரணமாக, அமெரிக்க நிறுவனங்கள் பொருட்களை அதிகமாக வாங்கி சேமித்துள்ளன. இதனால் அமெரிக்கா இறக்குமதி அதிகரித்துள்ளது.

யேல் பல்கலைக்கழக அறிக்கை படி, அமெரிக்காவின் மாதாந்தர வரி வருவாய் 3 மடங்கு அதிகரித்து $28 பில்லியனாக உயர்ந்துள்ளது. ஆனால், நீண்ட கால நன்மைகள் மெதுவான வளர்ச்சி மற்றும் வரி குறைப்புகளால் குறையக்கூடும்.

அமெரிக்க நுகர்வோரை தற்போது இறக்குமதி வரி பாதிக்கிறது. சாதனங்கள், உபகரணங்கள் மற்றும் பொம்மைகளின் விலை அதிகமாகி உள்ளது. ஜூன் மாதம் பணவீக்கம் 2.7% ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து உயர வாய்ப்புள்ளது என ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு