19 நிமிடங்களுக்கு முன்னர்

வாயு வெளியேறுவது என்பது இயல்பான ஒன்றுதான். ஒரு நபர் சாதாரணமாக ஒரு நாளைக்கு 5 – 15 முறை வாயுவை வெளியேற்றுகிறார்.

உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் அதிக வாயு வெளியேறுவது நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறியாக இருக்கலாம். அதனால் உங்களுக்கு ஏற்படும் அசௌகரியம் அல்லது சங்கடத்தை மறந்துவிடுங்கள்.

ஏனெனில், வாயுவை உண்டாக்கும் உணவுகள் பெரும்பாலும் இதயத்திற்கு ஆரோக்கியமானவை, நார்ச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்டுகள் கொண்டவை. அவற்றை உங்கள் உடலால் உடைக்க முடியாது, ஆனால் உங்கள் குடலில் உள்ள பாக்டீரியாக்களால் உடைக்க முடியும்.

எந்தெந்த உணவுப் பொருட்கள் வாயு வெளியேற காரணமாக உள்ளது? வாயுவில் துர்நாற்றம் ஏற்பட காரணம் என்ன? நீங்கள் எப்போது மருத்துவரை அணுக வேண்டும்? என்பதை மேற்கண்ட விளக்கப் படங்கள் மூலம் நீங்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம்.

வாயு வெளியேறுவதை தடுக்க முடியுமா?

பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் வாயுவை உண்டாக்கலாம். ஆனால் இவற்றை சரியான அளவில் உட்கொள்வதுதான் மிகவும் முக்கியம். நீங்கள் ஏற்கனவே நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளாதவர்கள் என்றால், நீங்கள் சாப்பிடும் அளவை அதிகரிப்பதும் உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

உங்கள் உணவுப் பழக்கத்தில் நார்ச் சத்துக்களை சேர்த்துக் கொண்டால் பாதகமான விளைவை தவிர்க்கலாம்.

அடிக்கடி தண்ணீர் குடிப்பது, அதிக வாயுவை உண்டாக்கும் மலச்சிக்கல் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது. உங்கள் குடலில் மலம் தங்கியிருந்தால், அது தொடர்ந்து நொதித்து, கூடுதல் வாயுவை உற்பத்தி செய்து துர்நாற்றம் வீசக்கூடும். ஒவ்வொரு முறையும் சாப்பிடும் போதும் தண்ணீர் குடித்து, நாள் முழுவதும் நீரேற்றத்துடன் (Hydrated) இருக்க முயலுங்கள்.

வாயு மற்றும் உப்புச்சத்தில் இருந்து விடுபட புதினா தேநீர் (Peppermint tea) பருகலாம் என இங்கிலாந்தில் உள்ள நேஷனல் ஹெல்த் சர்வீஸ் (NHS) பரிந்துரைத்துள்ளது.

பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் அதிக வாயு இருக்கும். அதைப் பருகும் போது வழக்கத்தை விட உங்களுக்கு அதிகமான வாயு வெளியேறும். சூயிங்கம் (Chewinggum) மெல்லும் போதும், சூப் அல்லது தானியங்களை பருகும்போதும் இது பொருந்தும். ஏனெனில் நீங்கள் உட்கொள்ளும் வாயு, எந்த வகையிலாவது வெளியேற வேண்டும் அல்லவா.

நீங்கள் கவலைப்பட வேண்டியது எப்போது?

பெரும்பாலும், வாயு வெளியேறுவதை பொருட்படுத்த தேவையில்லை. இது பாதிப்பில்லா காரணங்களால் ஏற்பட்டால் இதற்கு சிகிச்சை தேவையில்லை.சில சமயங்களில் அளவுக்கு அதிகமான வாயு வெளியேறினால் அது சில ஆரம்பநிலை உடல்நிலை பிரச்னையாகக் கூட இருக்கலாம். மருத்துவரை அணுகுவது நல்லது.மருந்துகளின் பக்க விளைவுகள் காரணமாகவும் துர்நாற்றம் நிறைந்த வாயு ஏற்படலாம்.-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு