மகாராஷ்டிராவின் மகளிர் உரிமைத்திட்டத்தில் 14,000 ஆண் பயனாளர்கள் – 26 லட்சம் பேர் தகுதியற்றவர்கள் என தகவல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அமல்படுத்தப்பட்ட ‘முதலமைச்சரின் மஜ்ஹி லட்கி பஹின்’ திட்டத்தின் (மகாராஷ்டிராவின் மகளிர் உரிமைத்திட்டம்) 2 கோடியே 52 லட்சம் பயனாளிகளில், கிட்டதட்ட 26 லட்சத்து 34 ஆயிரம் பெண்கள் தகுதியற்றவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, 14,298 ஆண்களும் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஆதிதி தத்கரே அவரது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் இந்த புள்ளிவிவரங்களை அளித்துள்ளார்.

முதலமைச்சரின் மஜ்ஹி லட்கி பஹின்திட்டத்தின் ( மகளிர் உரிமைத்திட்டம்) கீழ் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களை அடையாளம் காண்பதற்காக அனைத்து அரசு துறைகளிடமிருந்தும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை தகவல் கேட்டிருப்பதாக ஆதிதி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

சில பயனாளிகள் ஒன்றும் மேற்பட்ட திட்டத்தின் கீழ் பயனடைவதாகவும், சில குடும்பங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.

இந்த தகவலின் அடிப்படையில், இந்த 26.34 லட்சம் பயனாளிகளின் பயன்கள் ஜுன் 2025 முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பலன்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள 26.34 லட்சம் பயனாளிகள் பற்றிய தகவல்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் சரிபார்க்கப்பட்டு, தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு திட்டத்தின் பலன்களை அரசு அளிக்கும் என ஆதிதி தத்கரே தெரிவித்துள்ளார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அரசை ஏமாற்றி தவறான வழியில் பலன்களை பெற்றுவரும் போலியான பயனாளர்கள் மீது எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பிறகு அரசு மட்டத்தில் பொருத்தமான முடிவு எடுக்கப்படும் எனவும் ஆதிதி தத்கரே கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா அரசு தேர்தலுக்கு சற்று முன்பு ‘லட்கி பஹின் யோஜனா’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், பெண்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ரூ.1,500 வைப்பு வைக்கப்பட்டது.

ஆனால் தற்போது தேர்தலுக்குப் பிறகு சில குறிப்பிட்ட அளவுகோல்களின் கீழ் தகுதி சரிபார்க்கப்பட்டதையடுத்து சில பெண்கள் இந்த திட்டத்திலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

தேர்தலுக்கு முன் விண்ணப்பித்த பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு பணம் கிடைத்தது. ஆனால், மஹாயுக்தி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, லட்கி பஹின் யோஜனா திட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்க சில அளவுகோல்கள் நிர்ணயம் செய்யப்பட்டன.

அந்த அளவுகோல்கள் பின்வருமாறு:

ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு குறைவாக உள்ள பயனாளிகளுக்கு மட்டுமே பலன்கள் வழங்கப்படும். இதற்காக, வருமான வரித்துறையிடமிருந்து தகவல்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி விண்ணப்பங்கள் சரிபார்க்கப்படும். ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ள பெண்கள் இருந்தால் அவர்களுக்கு பலன்கள் கிடைக்காது. ஒரு பயனாளி வேறு ஏதேனும் அரசுத் திட்டத்தின் பலன்களைப் பெறுபவராக இருந்தால் அவரது விண்ணப்பம் மறு ஆய்வு செய்யப்படும். ‘நமோ ஷெத்காரி’ திட்டத்தின் பலன்களைப் பெறும் பயனாளி ஏற்கனவே ரூ.1000 பெறுகிறார். எனவே, அத்தகைய பயனாளிகளுக்கு ரூ.500 மட்டுமே கூடுதலாக வழங்கப்பட்டு, ரூ.1500 வரையிலான வித்தியாசம் ஈடுசெய்யப்படும்.நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் பெண்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்படும். இதற்காக, போக்குவரத்துத் துறையிடமிருந்து தகவல்கள் கோரப்படும். அத்தகைய பெண்கள் பலன்களைப் பெற்றிருந்தால், அவர்களுக்கு இனி பலன்கள் கிடைக்காது. ஆதார் அட்டையில் ஒரு பெயரும், வங்கியில் வேறு பெயரும் உள்ள விண்ணப்பங்களும் சரிபார்க்கப்படும். மத்திய அரசின் அனுமதி பெற்ற பிறகு, ஆதாரின் இ-கேஒய்சியும் செய்யப்படும். திருமணத்திற்குப் பிறகு வெளிநாடு சென்ற பெண்கள் மற்றும் அரசு வேலையில் இருந்து பலன்களைப் பெற்ற பெண்களின் விண்ணப்பங்களும் சரிபார்க்கப்படும்.தகுதியற்ற பெண் பயனாளிகளிடம் பணம் திரும்பப் பெறப்படுமா?

இதுவரை இந்தத் திட்டத்தில் மொத்தம் 2 கோடியே 34 லட்சம் பெண் பயனாளிகள் உள்ளனர். இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள 2 கோடியே 63 லட்சம் பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்ட போது 2 கோடியே 34 லட்சம் பெண்கள் மட்டுமே இத்திட்டதின் கீழ் பயனடைய தகுதியுள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டனர். அதன்படி அந்த பெண்கள் பலன்களை பெற்றனர். புதிய எண்ணிக்கை வரும்முன்பு சுமார் 16 முதல் 17 லட்சம் பெண்கள் முதலில் தகுதியற்றவர்களாக இருந்தனர்.

ஆனால் இந்த திட்டத்தில் முதலில் இருந்தே இந்த திட்டத்திற்கு தகுதியற்ற பெண்களும் , தற்போதைய புதிய அளவுகோல்களின்படி தகுதியற்றவர்களாகியிருக்கும் பெண்களும் இந்த திட்டத்தின் பலன்களை பெறமாட்டார்கள். விண்ணப்பங்கள் சரிபார்ப்பு இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. மேலும் சில பெண்கள் விடப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அரசு கோரிக்கை விடுத்தபின்னர், 4 ஆயிரத்து ஐநூறு பெண்கள் அவர்களாகவே விண்ணப்பித்து இந்த திட்டத்திலிருந்து அவர்கள் பெயர்களை நீக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இது தகுதியற்ற பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். எனவே தாமாக விண்ணப்பித்து திட்டத்திலிருந்து தங்கள் பெயர்களை நீக்கிக்கொள்ளும் பெண்கள் அவர்கள் ஆரம்பத்தில் பெற்ற பணத்தை திரும்பத் தருவார்கள்.

ஆனால், தற்போதைய புதிய அளவுகோல்களின்படி அரசால் தகுதியற்றவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பெண்கள் ஆரம்பத்தில் பெற்றுக்கொண்ட சில தவணை பணத்தை திருப்பி அளிப்பார்களா? இது ஒரு பெரிய கேள்வி.

பட மூலாதாரம், Getty Images

இந்த திட்டத்தின் கீழ் முதல் சில மாதங்களில் தகுதியற்ற பெண்களுக்கு அளிக்கப்பட்ட பணம் திரும்பப் பெறப்படாவிட்டால் சாதாரண மக்களே அதன் தண்டனையை அனுபவிப்பார்கள். இது சட்டத்திற்குட்பட்டதா? பணத்தை திரும்ப பெறாமல் இருப்பது சரியா? இதைப் போன்ற பல கேள்விகள் சாதாரண மக்கள் உட்பட அனைவராலும் கேட்கப்படுகின்றன.

பிபிசி மராத்தி முன்பு முன்னாள் குடிமைப் பணி அதிகாரி இ.இசட். கோப்ரகடேவிடம் முன்னர் எடுத்த பேட்டியில் இந்த கேள்விகளுக்கு விரிவான பதில்களை அளித்திருந்தார்.

லட்கி பஹின் திட்டம் குறித்து முதலமைச்சர் மற்றும் அமைச்சரின் அளித்த தகவல்களைப் பற்றி பேசிய முன்னாள் குடிமைப் பணி அதிகாரி இ.இசட. கோப்ரகடே, “லட்கி பஹின் திட்டத்திற்கு ஆரம்பத்திலிரும்பே அளவுகோல்கள் இருந்தன, இந்தத் திட்டத்தின் பலன்களை வழங்குவதற்கு முன்பு அவை சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு கூடுதல் அளவுகோல்களை விதிக்காமல் இந்தத் திட்டத்தின் பலன்களை வழங்கியது அடிப்படையில் அரசின் தவறு.

இந்தத் திட்டத்தால் அனைவரும் பயனடைந்தனர் என்று சொல்ல முடியாது. ஆனால், அரசியல் கட்சிகள் இதிலிருந்து பயனடைந்தன. அளவுகோல்களுக்கு பொருந்தாதவர்களுக்கும் பணம் வழங்கப்பட்டது. இப்போது தகுதியற்ற பயனாளிகளிடமிருந்து பணத்தை திரும்பப் பெற மாட்டோம் என்று சொல்வது தவறு. இது மக்களின் பணம்.

அதாவது, திட்டத்தை உருவாக்குவது, பலன்களை வழங்குவது, பின்னர் அளவுகோல்களை விதித்து தகுதியில்லாதவர்களைத் தீர்மானிப்பது ஆகியவை எல்லாம் தவறாகவும், விதிகளைப் பின்பற்றாமலும் செய்யப்பட்டுள்ளன.

எனவே, இதில் அரசே அடிப்படையில் குற்றவாளி. ஆரம்பத்தில், அதிகபட்ச பெண்களை எப்படி உள்ளடக்கலாம், இது எங்களுக்கு எப்படி பயனளிக்கும் என்று அரசு பார்த்தது, என்றார் கோப்ரகடே.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.’விதிகளுக்கு உட்பட்டது இல்லை’

“அரசின் கொள்கை அடிப்படையில் தவறானது என கோப்ரகடே மேலும் கூறினார். இந்தத் திட்டம் பெண்களின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக செயல்படுத்தப்படுவதாக அரசு கூறுகிறது, ஆனால் இது எந்தத் திட்டங்களிலும் பிரதிபலிக்கவில்லை.

தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பலன்களை திரும்பப் பெற வேண்டும், இல்லையெனில் மக்கள் இதற்கு பழகிவிடுவார்கள். நடந்த தவறை நியாயப்படுத்த முடியாது.

இதன் பாதிப்பு முழுவதும் சாதாரண மக்களைத் தாக்கப் போகிறது. உரிய பயனாளிகளுக்கு கிடைத்தால், இதை ஒரு திட்டமாக புரிந்துகொள்ளலாம். ஆனால், தவறானவர்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டனர். எனவே, அரசுக்கு இருக்கும் அடுத்த வாய்ப்பு, பணத்தை மீட்பது. அமைச்சர் பணம் மீட்கப்படாது என்று கூறுகிறார், இது அரசியலமைப்புக்கும் எந்த விதிக்கும் ஒவ்வாது.”

‘இழந்த பணத்தை அவர்களிடமிருந்து மீட்கவேண்டும்’

இத்தகைய திட்டங்கள் அரசியலமைப்பின் நான்காம் பகுதியின் சில பிரிவுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன. திட்டங்களை உருவாக்குவது அரசின் பொறுப்பு என்றால், அவை தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதும் அரசின் பொறுப்பு. எனவே, இத்தகைய திட்டம் தகுதியற்றதாக இருந்தாலும், அதை வழங்கிய அரசு, அதை பெற்றுக்கொள்பவரைப் போலவே அதற்கு பொறுப்பாகும்.

இப்போது கருவூலம் அழுத்தத்தில் இருப்பது உங்களுக்குத் தெரியும், அதனால்தான் இப்படி யோசிக்கிறீர்கள். இந்த ஞானம் அரசாக ஆரம்பத்தில் அவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இவை அனைத்திற்கும் முதலமைச்சர் மற்றும் துறையின் முடிவெடுக்கும் அதிகாரிகளை பொறுப்பாக்குவதிலிருந்து யாரும் பின்வாங்கக்கூடாது.

இந்த திட்டத்தில் அளவுகோல்களுக்கு உட்படாதவர்களுக்கு பலன்கள் வழங்கப்பட மாட்டாது என்று சொல்வது போல், அளவுகோல்களுக்கு வெளியே ஏற்கனவே பலன்களைப் பெற்றவர்களிடமிருந்து பணத்தை மீட்போம் என்று அனைவரும் கூற வேண்டும். இல்லையெனில், இந்த இழந்த பணத்தை அவர்களிடமிருந்து மீட்க வேண்டும்,” என்றார் கோப்ரகடே.

பட மூலாதாரம், Getty Images

கொடுக்கப்பட்ட பணத்தை திரும்பப் பெறுவது குறித்து கோப்ரகடே, “இப்படி பல திட்டங்களை பயன்படுத்திக்கொள்பவர்கள் அனைத்து மட்டங்களிலும் உள்ளனர். அரசு பல திட்டங்களை செயல்படுத்துகிறது, அவற்றில் தகுதியற்றவர்களாகக் கண்டறியப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பணம் மீட்கப்படுகிறது,” என்றார்.

மீட்பு குறித்து கோப்ரகடே மேலும் கூறுகிறார், “பணத்தை மீட்பதற்கு பல வழிகள் உள்ளன. அரசுக்கு மீட்க வேண்டும் என்ற உறுதி மட்டும் இருக்க வேண்டும். பணம் திரும்ப செலுத்தப்படவில்லை என்றால், பயனாளிக்கு எந்தப் பலனும் வழங்கப்படாது. பயனாளிகள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இப்போது, இந்தத் திட்டம் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, எனவே அரசும் பலனடைந்துள்ளது. ஆகையால் அரசு இப்போது இவர்களை வருத்தாது என நினைக்கிறேன்.

தேர்தலுக்கு முன்பு, மகாயுதி அரசு லட்கி பஹின் யோஜனாவிற்காக 6 மாதங்களில் சுமார் ரூ.17,000 கோடி விநியோகித்தது. மேலும், புதிய தேர்தலுக்குப் பிறகு, மகாயுதி அரசு 2024-25 ஆம் ஆண்டில் துணை மானிய கோரிக்கைகளின்படி லட்கி பஹின் யோஜனாவிற்கு மொத்தம் ரூ.35,000 கோடி கூடுதல் ஒதுக்கீடு செய்தது.

இந்தத் திட்டத்திற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்தப் பணம் அனைத்தும் சாதாரண மக்களுடையது. ஆனால், சரியான திட்டமிடல் மற்றும் கொள்கை இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டதாக அதே சாதாரண மக்கள் கூறுகிறார்கள்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு