வறுமையால் ‘விற்பனைக்கு’ இருந்த கிராமம் இன்று செல்வம் கொழிக்கும் இடமாக மாறியது எப்படி?

பட மூலாதாரம், Kuldeep Brar/BBC

படக்குறிப்பு, கொய்யா சாகுபடி இல்லாத காலத்தில், தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பராமரிப்பதும் மிகவும் கடினமாக இருந்தது என்று ஒப்பந்ததாரர் கோபி சந்த் கூறுகிறார்.எழுதியவர், குல்தீப் ப்ரார்பதவி, பிபிசி செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

“முன்பு நான் ஒரு நாளைக்கு 400 – 500 ரூபாய் சம்பாதித்து வந்தேன். ஆனால், இன்று 50 பேர் என்னிடம் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு ஒரு நாளைக்கு 1,500 ரூபாய் ஊதியம் தருகிறேன். கொய்யா விவசாயம் செய்து வீடு கட்டிவிட்டேன், சொந்தமாக டிராக்டர் மற்றும் கார் வாங்கிவிட்டேன்”

இதுதான் பஞ்சாப் மாநிலம் ஃபாசில்காவில் உள்ள முலியன்வாலே கிராமத்தைச் சேர்ந்த கோபி சந்த் கூறியது. கடந்த 10 – 12 வருடங்களாக கொய்யா தோட்டத்தை வாடகைக்கு எடுத்து, விவசாயம் செய்து வரும் இவருக்கு இது நல்ல பலனளித்துள்ளது.

முலியன்வாலே கிராமம் முன்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஓர் கிராமம். வெள்ளத்துக்கு பிறகு இந்த கிராமத்தில் பாரம்பரிய பயிர்களின் விளைச்சலே இல்லை என்கிறார் கிராமத்தின் முன்னாள் தலைவர் நரிந்தர் பால் சிங்.

“பொருளாதார சூழ்நிலை காரணமாக கிராமத்தை விற்க முடிவெடுத்தோம். ஆனால் அப்போது யாரும் இதை வாங்க முன்வரவில்லை” என்றார்.

மேலும் பேசிய அவர், “அந்த சமயத்தில் வேலைக்காக மக்கள் பக்கத்து கிராமத்துக்கு சென்றுவந்தனர். ஆனால், இப்போது பக்கத்து கிராமத்தில் இருந்து இங்கு வந்து வேலை பார்க்கின்றனர். ஏனென்றால், கொய்யா விவசாயத்தில் ஒரு நாளைக்கு 1,000 – 1,500 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது” என்றார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இது தொடங்கியது எப்படி?

முதலில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் கொய்யா, நாவல் பழ மரங்களை வளர்த்தனர். அதன்பின், முலியன்வாலேவில் நல்ல வருமானம் கிடைக்கத் தொடங்கியதால், மொத்த கிராமமும் இதில் களமிறங்கியது என விவரிக்கிறார் நரிந்தர் பால் சிங்.

இதில் எந்த பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்படுவதில்லை என்கிறார்.

“கொய்யா மரம் வளர்ந்த பிறகு அதில் நிறைய பழங்கள் காய்க்கும் அதனால் வருமானம் அதிகரிக்கும் என்றார்கள்”

“ஒரு விவசாயி ஒரு குவிண்டாலுக்கு 5 – 6 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். இந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் இப்போது வெளிநாடு செல்ல விரும்புவதில்லை. உள்ளூரில் பழங்கள் சாகுபடி செய்வதையே பெருமையாக கருதுகின்றனர்” என்கிறார்.

பட மூலாதாரம், Kuldeep Brar/BBC

படக்குறிப்பு, முலியன்வாலே கிராமத்தின் முன்னாள் தலைவர் நரிந்தர் பால் சிங்இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அனூப் சிங் கூறுகையில், “10 – 15 ஆண்டுகளுக்கு முன் நாவற்பழ விவசாயத்தை தொடங்கி வெற்றி பெற்ற விவசாயிகளைப் பார்த்து தற்போது இந்த கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இதை கையில் எடுத்துள்ளனர்” என்கிறார்.

மேலும் பேசிய அவர், “கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல ஆண்டுகளுக்கு முன்பே பருத்தி, கோதுமை போன்றவற்றின் விளைச்சல் நின்றுவிட்டது. அந்த சமயத்தில், தொழிலாளர்கள் வேறு கிராமத்துக்கு வேலைக்குச் சென்றனர். இதனால் சோகமடைந்த விவசாயிகள், கிராமத்தையே விற்கும் முடிவுக்கு வந்தனர். ஆனால், இப்போது விவசாயிகள், இந்த பழங்கள் சாகுபடியில் நல்ல வருமானம் ஈட்டி வருகின்றனர்” என்றார்.

அனூப் சிங் தனது தோட்டத்தை வாடகைக்கு விட்டுள்ளார்.

“கொய்யா சாகுபடியில் பெரிய செலவுகள் இருக்காது. மரம் வளர்ந்த 4 – 5 ஆண்டுகளில் பழங்கள் கிடைக்கும். இதனால் ஆண்டுதோறும் வருமானம் ஈட்ட முடியும். நிறைய விவசாயிகள் இதைச் செய்ய முன்வர வேண்டும்” என்றார்.

சவால்கள் என்ன?

பட மூலாதாரம், Kuldeep Brar/BBC

படக்குறிப்பு, கனமழையால் சுமார் 10 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒப்பந்ததாரர் கோபி சந்த் கூறுகிறார்.”கொய்யா சாகுபடி இல்லாத காலத்தில், வாழ்க்கையை நடத்துவது மிகவும் கடினமாக இருந்தது” என்கிறார் ஒப்பந்ததாரர் கோபி சந்த்.

“இப்போது வீட்டின் நிலை மாறிவிட்டது. ஆனால் இன்னும் நிறைய சவால்களை சந்திக்கிறோம். உதாரணமாக, இந்த முறை கனமழை பெய்தபோது ரூ.10 லட்சம் வரை இழப்பை சந்தித்தேன்” என வேதனை தெரிவித்தார்.

“இதைத் தவிர இதை சந்தைப்படுத்துவதில் கடும் சிரமங்கள் உள்ளன. ஏனென்றால் இதை விற்க வேண்டுமென்றால் நாங்கள் டெல்லி செல்ல வேண்டும். அதற்கு நிறைய நேரம் எடுக்கும்”

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.முலியன்வாலே கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து 25 ஏக்கர் கொய்யா தோட்டத்தை ரூ.40 லட்சத்திற்கு குத்தகைக்கு எடுத்துள்ளதாகவும், அதில் 90 ஆட்கள் வேலை செய்வதாகவும் கூறுகிறார் ஒப்பந்ததாரர் ரக்பீர் சிங்.

மேலும் பேசிய அவர், “இதில் மூன்றில் ஒரு பங்கு லாபம் கிடைக்கும். ஆனால், இம்முறை அதிக மழை பெய்ததால் பயிர்கள் கடுமையாக பாதிப்படைந்தன. டெல்லிக்கு அனுப்பும் போது பழங்கள் அழுகிவிடுகின்றன. அருகிலேயே சந்தைப்படுத்த முடிந்தால் எங்களுக்கு நிறைய பலன் கிடைக்கும்” என்றார்.

வல்லுநர்கள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Kuldeep Brar/BBC

படக்குறிப்பு, தோட்டக்கலை தொழில்நுட்ப உதவியாளர் ராம் குமார்தோட்டக்கலை தொழில்நுட்ப உதவியாளர் ராம் குமார், “ஃபசில்கா மாவட்டத்தில் உள்ள முலியன்வாலே கிராமத்தில்தான் முதல் கொய்யா தோட்டம் உருவானது. ஆனால், இப்போது இந்த கிராமத்தை பார்த்து மற்ற கிராமங்களும் பழங்களை சாகுபடி செய்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

கமல் வாலா, ஜோதிநன் வாலா, அர்னி வாலா உள்ளிட்ட கிராமங்களும் இதில் அடங்கும்.

“இதற்கு முன்பாக பஞ்சாபில் நாவல் பழ தோட்டங்களை நடும் பாரம்பரியம் கிடையாது” என்கிறார் ராம்.

பட மூலாதாரம், Kuldeep Brar/BBC

படக்குறிப்பு, வேளாண் பல்கலைக்கழகம் கொக்கூன் வகை ஜாமுன்களை உருவாக்கியுள்ளது.”ஒவ்வொரு செடியும் 5-8% வருமானத்தை ஈட்டித்தருவதாக கூறுகிறார்கள். கொய்யா செடி 5 முதல் 6 வயது வரை காய்க்கத் தொடங்கி, எட்டு வயதுக்குள் முழு பலனைத் தரும்” என்கிறார்.

“ஒரு ஏக்கரில் சுமார் 50 கொய்யா செடிகளை 30 அடி தூரத்தில் நடலாம். இதை அதிக நோய்கள் தாக்காது”

மேலும், பழத் தோட்டங்களை நடும் விவசாயிகளுக்கு அரசு, ஏக்கருக்கு ரூ.12,000 மானியம் வழங்குகிறது. ஒரு விவசாயிக்கு 5 ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வேளாண் பல்கலைக்கழகம் கொக்கூன் வகை கொய்யா ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும் ராம் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து பேசுகையில். “இதன் மகசூலும் நன்றாக உள்ளது. மேலும் அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பழங்களின் தரமும் நன்றாக உள்ளது” எனக் கூறினார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு