Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
காஸாவில் தலையிலும் மார்பிலும் சுடப்படும் பச்சிளம் குழந்தைகள் – பிபிசி கள ஆய்வுகாணொளிக் குறிப்பு, காஸாவில் தலையிலும் நெஞ்சிலும் சுடப்படும் குழந்தைகள்காஸாவில் தலையிலும் மார்பிலும் சுடப்படும் பச்சிளம் குழந்தைகள் – பிபிசி கள ஆய்வு
2 மணி நேரங்களுக்கு முன்னர்
காஸாவில் குழந்தைகள் சுடப்பட்டு இறப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் (ஐடிஎஃப்) தான் இதைச் செய்வதாக பாலத்தீன தரப்பு தெரிவிக்கிறது. இது தொடர்பாக பிபிசி கள ஆய்வில் சேகரித்த தகவல்களில் மட்டும் 95 குழந்தைகள் அவ்வாறு இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவற்றில் 57 சம்பவங்களில் ஐடிஎஃப் தான் சுட்டதாக நேரில் பார்த்த சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. காஸாவில் மருத்துவர்களும் குழந்தைகள் சுடப்படுவது பற்றி கவலை தெரிவித்துள்ளனர். பிபிசியின் செய்திக்கு எதிர்வினையாற்றிய “பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் மீதான திட்டமிட்ட தாக்குதல் தடை செய்யப்பட்டவை. மற்றும் அவை சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐடிஎஃபின் உத்தரவுகளுக்கு முற்றிலும் எதிரானது.” எனத் தெரிவித்துள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு