தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு சொந்தமான காணி இருக்கும் போது, தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி இராணுவத்தினருடன் இணைந்து விகாரை கட்டியமை மகா தவறு. அதனை பௌத்த துறவி செய்திருக்க கூடாது என நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ தெரிவித்துள்ளார்.நயினாதீவில் உள்ள நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் தலைமையிலான பிக்குகள் தையிட்டி விகாரை பகுதிக்கு இன்று வெள்ளிக்கிழமை (02) விஜயம் செய்து காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அனுமதியின்றி இராணுவத்தினரால் தையிட்டி விகாரை அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் நயினாதீவு விகாராதிபதி அண்மையில் நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர்.அதன் ஒரு கட்டமாக தையிட்டிக்கு நேரடி விஜயம் மேற்கொண்ட நயினாதீவு விகாராதிபதி காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடியதுடன் திஸ்ஸ விகாரைக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பற்றை வளர்ந்திருந்த காணியை பார்வையிட்டு சென்றுள்ளார்.இதனிடையே தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட செயலர் கலந்துரையாடலில் ஈடுபட்டதற்கு அமைவாக, திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் மட்டுப்பாடான அளவில் எல்லையிட்டு, அதனைத் தவிர்த்து ஏனைய காணிகளை கட்டம் கட்டமாக விடுவிப்பது தொடர்பாக – விகாராதிபதியுடன் சந்தித்து தொடர் நடவடிக்கை எடுப்பது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அத்தீர்மானத்திற்கமைய, இன்றைய தினம் (02.01.2025) மாவட்ட செயலர் விகாராதிபதியுடன் கலந்துரையாடியுள்ளார்.
விகாரை :மகா தவறு!
4