🚨 கல்லடியில் இளைஞனின் சடலம் மீட்பு! – Global Tamil News

by ilankai

மட்டக்களப்பு நகரின் பிரதான மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த கல்லடிப் பகுதியில் இன்று (ஜனவரி 02, வெள்ளிக்கிழமை) காலை தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவாின் மீட்கப்பட்டுள்ளது. கல்லடி ஜீவி (GV) தனியார் வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள வர்த்தகக் கட்டடம் ஒன்றின் உயரமான பகுதியில் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அக்கரைப்பற்று, சமுர்த்தி வீதியைச் சேர்ந்த முகுந்தன் சந்தோஷ் (வயது 22) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று அதிகாலை வேலைக்குச் சென்றவர்கள் மற்றும் பொதுமக்கள், உயரமான இடத்தில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்குவதைக் கண்டு காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினா் மற்றும் தடயவியல் (SOCO) காவல்துறைப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பல வர்த்தக நிலையங்கள் மற்றும் வைத்தியசாலை அமைந்துள்ள பிரதான வீதியில் இந்தச் சம்பவம் நடந்ததால், அந்த இடத்தில் பெருமளவிலான மக்கள் திரண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது. இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். உயிரிழந்த இளைஞன் அக்கரைப்பற்றிலிருந்து மட்டக்களப்பிற்கு எதற்காக வந்தார்? அவர் தங்கியிருந்த இடம் எது? என்பது தொடர்பான தகவல்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். நீதிமன்ற விசாரணை மற்றும் மரண பரிசோதனைகளின் பின்னரே மேலதிக விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Tag Words: #Batticaloa #Kallady #MugunthanSanthosh #BreakingNews #SriLankaPolice #Tragedy #SOCO #Akkaraipattu #TamilNews #GvHospital

Related Posts