Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் நாளை மறுதினம் திங்கட்கிழமை செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் குறித்த பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அக் குழுவினர் செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகளுடனும் மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திகளுக்குமான நிலையத்தின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் தெரிவித்தார்.