மாகாணசபை தேர்தல் தொடர்பில் அனுர அரசு கண்டுக்கொள்ளாதிருக்கின்ற நிலையில் புத்தாண்டில் மாகாண சபைத் தேர்தலை எவ்வளவு விரைவில் நடத்த முடியுமோ அவ்வளவு விரைவில் நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி இன்று அழைப்பு விடுத்துள்ளது.நடப்பாண்டில் மாகாண சபைத் தேர்தலுக்கு தனது கட்சி தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.மேலும், 2026 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை நிலைநாட்டப்படும் என்றும் ரஞ்சித் மத்தும பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.இதனிடையே ஜனாதிபதி அநுர பதவிக்கு வருவதற்கு முன்பாக அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல்வேறுபட்ட உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், புதிய அரசு பதவியேற்று ஒரு வருடம் கடந்த நிலையிலும் மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல், இழுபறிகளில் காலம் கடத்தப்படுகின்றதே தவிர, தேர்தல் வைப்பதற்கான எந்த உத்தேசமும் இருப்பதாகத் தெரியவில்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், குறைந்த பட்சம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதனூடாக மாத்திரமே அரசியல் சாசனத்தில் இருக்கக்கூடிய அதிகாரங்களைக் கையிலெடுத்து, இயலக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களை வடக்கு – கிழக்கில் உருவாக்க முடியுமெனவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மாகாணசபை தேர்தலாவது நடக்குமா?
4