சீதுவை பகுதியில் உள்ள பிரபல இரவு விடுதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த குழுவொன்றை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். விசேட சுற்றிவளைப்பின் போது 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த 6 பெட்ரோல் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து குறித்த நிறுவனத்தின் முகாமையாளர் ஒரு வர்த்தகர் மூன்று முச்சக்கர வண்டி சாரதிகள் மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிப்பட்ட குரோதம் அல்லது தொழில் போட்டி காரணமாக இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டதா என்பது குறித்து மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். காவல்துறையினரின் இந்த துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது. #Seeduwa #CrimeNews #SriLankaPolice #PetrolBomb #BreakingNews #SecurityAlert #CrimePrevention #SriLanka
சீதுவையில் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு – 6 பேர் கைது! 🚨 – Global Tamil News
5