தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்களுக்கிடையில் மொழி மற்றும் கலாச்சாரப் புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் விசேட பரிமாற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் (பாலையடி புதுக்குளம்). டிசம்பர் 26 (வெள்ளிக்கிழமை) முதல் டிசம்பர் 29 (திங்கட்கிழமை) வரை நடைபெறுகின்றது கம்பஹா மாவட்டத்திலிருந்து வருகை தந்த 20 இளைஞர், யுவதிகள் மற்றும் மாந்தை மேற்குப் பகுதி இளைஞர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ள நிலையில் அருட்தந்தை செல்வநாயகம் பீரிஸ், உதவி பிரதேச செயலாளர் டிலக்ஸன், மாவட்ட இணைப்பாளர் அசோக்க முனசிங்க மற்றும் அரசு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனா் இந்த 4 நாட்கள் தங்கியிருக்கும் திட்டத்தின் மூலம், இரு வேறுபட்ட சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஒருவருக்கொருவர் மொழித் திறன்களைப் பகிர்ந்து கொள்வதோடு, கலாச்சார விழுமியங்களையும் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது. #LanguageBridge #NationalUnity #SriLankaYouth #Mannar #Gampaha #CulturalExchange #PeaceAndHarmony #TamilNews #YouthEmpowerment
தமிழ் – சிங்கள இளைஞர்களுக்கிடையில் 'மொழிப் பாலம் – Global Tamil News
4
previous post