அமெரிக்காவின் டென்வரில் இருந்து மியாமிக்கு பயணிக்கவிருந்த விமானத்தில் திடீரென   ஏற்பட்ட தீ பரவலினால்  6 பயணிகள் காயமடைந்ததாகவும், ஒரு பயணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து விமானத்தின் பயணம் இரத்து செய்யப்பட்டு  விமானம் ஓடுபாதையில் இருந்து வெளியேற்றப்பட்டு அதிலிருந்த 173 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த  தீ விபத்து ஏற்பட்டதாகவும்  இதனால் விமானத்தின் டயரில் தீ மற்றும் புகை ஏற்பட்டதாக   கூறப்படுகிறது.   அமெரிக்க விமான சேவைக்கு சொந்தமான போயிங் MAX 8  எனும் விமானத்திலேயே இவ்வாறு தீ பரவல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது