செம்மணி:புதைகுழி நூறினை தாண்டியது!

தூயவன் Saturday, July 26, 2025 யாழ்ப்பாணம்

செம்மணி மனிதப்புதைகுழி : இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளின்  எண்ணிக்கை 101 ஆக உயர்வடைந்துள்ளது.

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு – கட்டம் 2, நாள் 21 இன்று தொடர்ந்து இடம்பெற்றது. இன்று மேலும் 11 மனித எலும்புக்கூடுகள்  கண்டுபிடிக்கப்பட்டன. 

இதன் மூலம் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. இதில் 90 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழப்பட்டுள்ளன, மேலும் 46 சாட்சிய ஆதாரப் பொருட்கள் இதுவரை அகழப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

யாழ்ப்பாணம்

Post a Comment