Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், ஜோஷ் எல்ஜின்பதவி, பிபிசி செய்திகள்26 ஜூலை 2025, 08:00 GMT
புதுப்பிக்கப்பட்டது 20 நிமிடங்களுக்கு முன்னர்
மூளை சக்தியை அதிகரிக்கவும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கவும், ஒரு நாளைக்கு 7,000 அடிகள் நடப்பது போதுமானதாக இருக்கும் என்று ஒரு முக்கிய ஆய்வு கூறுகிறது.
10,000 அடிகள் நடக்க வேண்டும் என்பது பொதுவாக அடைய வேண்டிய இலக்காக கருதப்படுகிறது. ஆனால், அதைவிட எளிதாக அடையக் கூடிய, யதார்த்தமான இலக்காக இது இருக்கலாம்.
லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியான ஒரு புதிய ஆய்வறிக்கை, புற்றுநோய், டிமென்ஷியா மற்றும் இதய நோய் போன்ற உடல்நலப் பிரச்னைகளின் அபாயம் குறைவதற்கும், இந்த எண்ணிக்கைக்கும் தொடர்புள்ளது என கண்டறிந்துள்ளது.
மக்கள் தங்களது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக, தினசரி எத்தனை அடிகள் நடக்கிறோம் என்பதை கண்காணிக்க, இந்த ஆராய்ச்சி முடிவுகள் ஊக்குவிக்கக் கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
“ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடக்க வேண்டும்” என்ற கருத்து நம்மிடம் உள்ளது, ஆனால் அது ஆதாரங்களை அடிப்டையாகக் கொண்டது அல்ல” என்கிறார் முன்னணி ஆராய்ச்சியாளர் மெலடி டிங்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
10,000 அடிகள் என்ற எண்ணிக்கை, 1960-களில் ஜப்பானில் நடந்த ஒரு விளம்பர நிகழ்ச்சியில் முதன்முறையாக அறிமுகமானது.
1964 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக, “10,000 அடி மீட்டர்” என்று பொருள்படும் ‘மான்போ-கீ’ என்ற பெடோமீட்டர் பிராண்ட் அறிமுகமானது.
ஆனால், அதற்காக உருவாக்கப்பட்ட இந்த எண்ணிக்கை, “அந்தச் சூழலிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு”, அதிகாரப்பூர்வமற்ற வழிகாட்டுதலாக, இன்றும் பல உடற்பயிற்சி சாதனங்களாலும், செயலிகளாலும் பரிந்துரைக்கப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர் மெலடி டிங் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தங்களது கண்டுபிடிப்புகள் எதிர்கால பொது சுகாதார நெறிமுறைகளை வடிவமைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியான ஒரு முக்கிய ஆய்வில், உலகெங்கிலும் உள்ள 160,000 க்கும் மேற்பட்டவர்களின் உடல்நலம் மற்றும் செயல்பாடு குறித்த முந்தைய ஆய்வுகள் மற்றும் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.
ஒரு நாளைக்கு 2,000 அடிகள் நடப்பவர்களுடன் ஒப்பிடும் போது, 7,000 அடிகள் நடப்பவர்களுக்கு கீழ்க்கண்ட ஆபத்துகள் குறைவாக இருப்பது அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதய நோய் – 25% குறைவுபுற்றுநோய் – 6% குறைவுடிமென்ஷியா – 38% குறைவுமன அழுத்தம் – 22% குறைவு. ஆனால், சில நோய்களைக் குறித்த புள்ளிவிவரங்கள், குறைந்த எண்ணிக்கையிலான ஆய்வுகளிலிருந்து பெறப்பட்டவை என்பதால், அவை மற்றவற்றை விட குறைவான துல்லியத்துடன் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால், வெறும் 2,000 அடிகள் நடப்பது என்ற மிகக் குறைந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, ஒரு நாளைக்கு சுமார் 4,000 அடிகள் நடப்பது என்ற மிதமான எண்ணிக்கை சிறந்த உடல்நலத்துக்குப் பங்களிக்கிறது என்று அந்த மதிப்பாய்வு குறிப்பிடுகிறது.
பெரும்பாலான உடல்நலக் குறைபாடுகளுக்கு, 7,000 அடிகள் வரை நடந்தாலே போதுமான நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால் அதைவிட அதிக அடிகள் நடந்தால் இதய ஆரோக்கியத்திற்கு கூடுதல் நன்மை கிடைக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, உடற்பயிற்சி சாதனங்களில் தினசரி எத்தனை அடிகள் நடந்திருக்கிறோம் என்பதை எண்ணுவது ஒரு பிரபலமான பொழுதுபோக்காக மாறிவிட்டது.உடற்பயிற்சி செய்வதற்கான பெரும்பாலான நெறிமுறைகள், எத்தனை அடிகள் நடக்க வேண்டும் என்ற எண்ணிக்கையை விட உடற்பயிற்சி செய்வதற்கு செலவிடும் நேரத்தை மையமாகக் கொண்டுள்ளன.
உதாரணமாக, 18 வயதுக்கு மேற்பட்டோர் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான ஏரோபிக் பயிற்சியோ அல்லது 75 நிமிடங்கள் தீவிரமான ஏரோபிக் பயிற்சியோ செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
இந்த அறிவுரையை மக்கள் புரிந்துகொள்வது சில நேரங்களில் கடினமாக இருக்கலாம், ஆனால் தற்போதைய நெறிமுறைகள் ஒரு முக்கியமான நோக்கத்திற்கு உதவுகின்றன என்று கூறுகிறார் டிங் .
“நீச்சல் பயிற்சியில் ஈடுபடுதல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது உடல் குறைபாடுகளின் காரணமாக நடக்க முடியாதவர்கள் உள்ளனர்,” என்றும் அவர் விளக்குகிறார்.
ஆனால், மக்கள் எத்தனை அடிகள் நடக்க வேண்டும் என்பதற்கான பரிந்துரையை, ஒரு “கூடுதல்” தகவலாக சேர்க்கலாம் என்றும், இது மக்கள் “நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படுவது குறித்து சிந்திக்க உதவும்” என்றும் அவர் கூறுகிறார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.லண்டனின் புருனல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, செடன்டரி பிஹேவியர் மற்றும் சுகாதார நிபுணரான மருத்துவர் டேனியல் பெய்லி, “ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடப்பது அவசியம்” என்ற கருத்து, ஆதாரமற்ற ‘கட்டுக்கதை’ என்ற கருத்தை இந்த ஆய்வு முன்வைக்கிறது என்று கூறுகிறார்.
சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்பது பொருத்தமான இலக்காக இருந்தாலும், மற்றவர்களுக்கு 5,000 முதல் 7,000 அடிகள் நடப்பது, “மிகவும் யதார்த்தமான மற்றும் அடையக் கூடிய இலக்காக” இருக்கலாம் என்று அவர் விளக்குகிறார்.
போர்ட்ஸ்மவுத் பல்கலைக் கழகத்தின் மருத்துவ உடற்பயிற்சி உடலியல் துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் ஆண்ட்ரூ ஸ்காட், நடப்பதற்கு எண்ணிக்கை முக்கியமல்ல என்று கூறுகிறார்.
“அதிகமாக நடப்பது எப்போதும் நல்லது” என்று கூறும் அவர், செயல்பாடு குறைவாக இருக்கும் நாட்களில் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டும் என்று மக்கள் அதிகமாக கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு