யாழ்ப்பாணத்தில் அதீத போதையில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் – கொட்டடி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு அளவுக்கு அதிகமாக மதுபானத்தை பாவித்து விட்டு வீட்டுக்கு வந்து உணவு அருந்திவிட்டு உறங்கியுள்ளார்.

பின்னர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை தனது உயிரை மாய்த்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love

  அதீத போதைகொட்டடி