நாட்டின் சுற்றுலாத் துறையை  மேம்படுத்தும் நோக்கில் மேலும் 40 நாடுகளுக்கான விசா கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று காலை   பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மையத்தில்    ஹோட்டல் ஷோ கொழும்பு 2025″ கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில்  ஆரம்பித்து வைக்கப்பட்டது.    இந்த நிகழ்வில் உரையாற்றுகையிலேயே  அமைச்சர்  விஜித ஹேரத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாத் துறையை   மேம்படுத்தும் முயற்சியாக, மேலும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து, மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்  விசா கட்டணமின்றி இலங்கைக்கு வரும் வாய்ப்பை வழங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவா் இங்கிலாந்து உள்ளிட்ட மேலும் 40 நாடுகளுக்கு இலவச விசா வசதியை வழங்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொிவித்துள்ளாா்.

. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டவுடன், மொத்தம் 47 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா கட்டணமின்றி இலங்கைக்கு வர அனுமதிக்கப்படுவர் எனவும்  இந்தத் தீர்மானத்தால், அரசு திறைசேரி ஆண்டுக்கு 66 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழக்கும். என்ற போதிலும்   , சுற்றுலாத் துறையின் வளர்ச்சியின் மூலம் மறைமுகமாக நாட்டிற்கு அதிக வருமானம் கிடைக்கும் என  தாங்கள் நம்புவதாகவும் அவா் தொிவித்துள்ளாா்.