Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
காட்டு யானைகள் ரயில்களில் மோதுவதைத் தடுக்க AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உபகரணமொன்றை பரிசோதிப்பதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு முடிவு செய்துள்ளது.
நாளை முதல் கொழும்பிலிருந்து மாத்தளைக்கு செல்லும் ரயிலில் இந்த உபகரணம் பொருத்தப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
சோதனைகளைத் தொடர்ந்து, மட்டக்களப்பு பாதையில் இரவில் இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் இந்த சாதனம் பொருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனம் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் பேராசிரியர் லிலாந்த சமரநாயக்க உள்ளிட்ட குழுவால் வடிவமைக்கப்பட்டுள்ளது.