Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இந்தியா, பிரிட்டன் இடையிலான தடையில்லா ஒப்பந்தம் மூலம் கிடைக்கப் போகும் பலன்கள்
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், ஜெனிஃபர் மெக்கீர்னன்பதவி, அரசியல் செய்தியாளர், பிபிசி நியூஸ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டாமருடன் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் பிரிட்டனின் கார்கள் மற்றும் விஸ்கியை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதும், இந்தியாவின் ஜவுளி மற்றும் நகைகளை பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்வதும் மலிவாகும்.
இந்த ஒப்பந்தத்தை எட்ட மூன்று ஆண்டுகளானது என்பதுடன் சட்டவிரோத குடியேற்றத்தை எதிர்கொள்வதற்கான இந்தியா-பிரிட்டன் கூட்டுத் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் விரிவான சமூகப் பாதுகாபு அம்சங்கள் காரணமாக பிரிட்டிஷ் தொழிலாளர்களை பாதிக்கலாம் என்று இதை எதிர்ப்பவர்கள் எச்சரித்திருந்தனர்.
ஆனால், அது “முற்றிலும் தவறு” என்று பிரிட்டன் வணிக செயலாளர் ஜோனதன் ரெனால்ட்ஸ் கூறினார். அவர், “பிரிட்டனில் தற்காலிகமாகப் பணியில் அமர்த்தப்படும் இந்திய தொழிலாளர்களுக்கு, பல நாடுகளின் தொழிலாளர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள அதே சலுகைகள்தான் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
காணொளிக் குறிப்பு, பிரிட்டன் பிரதமரின் கிராமப்புற இல்லமான செக்கர்ஸில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த நிகழ்ச்சியில் பேசிய கியர் ஸ்டாமர், “இந்த ஒப்பந்தம் இப்போது கையெழுத்தாகி, முத்திரையிடப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்தார்.
“இரு நாடுகளுக்கும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க நாளாக நான் கருதும் இந்த நாளில் ஒருவருக்கொருவர் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றியுள்ள தருணத்தில் உங்களை இங்கு வரவேற்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.”
அதோடு, இந்திய நிறுவனங்கள் பிரிட்டனில் தங்கள் செயல்பாடுகளை விரிவாக்குவதாலும், பிரிட்டிஷ் நிறுவனங்கள் இந்தியாவில் புதிய வணிக வாய்ப்புகளைப் பெறுவதாலும், இந்த ஒப்பந்தம் பிரிட்டனில் 2,200க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.
“இந்தியாவுடனான நமது ஒத்துழைப்புக்கு வரையறை ஏதுமில்லை. வரலாறு, குடும்பம் மற்றும் கலாசார ரீதியாகத் தனித்துவமான பிணைப்புகளைக் கொண்ட ஒரு நாட்டுடனான உறவை மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம்,” என்று கியர் ஸ்டார்மர் தெரிவித்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, “இது பகிர்ந்துகொள்ளப்படும் செழுமைக்கான ஓர் அடித்தளம்” என்று இந்த ஒப்பந்தம் குறித்துப் பேசியபோது தெரிவித்தார்.
அதோடு, “ஒருபுறம், இந்திய ஜவுளி, காலணிகள், ரத்தினங்கள், நகைகள், கடல் உணவு, பொறியியல் பொருட்கள் பிரிட்டன் சந்தையை எளிதில் அடைய முடியும்.”
“மறுபுறம், இந்தியாவில் உள்ள மக்களும் தொழில்களும் மருத்துவ சாதனங்கள் மற்றும் வான்வெளித் துறை பாகங்கள் போன்ற பிரிட்டனின் தயாரிப்புகளை மலிவு மற்றும் கவர்ச்சிகரமான விலையில் அணுக முடியும்” என்று தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
பல வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு மே மாதம் அறிவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், பிரிட்டன் பொருளாதாரத்தை ஆண்டுக்கு 4.8 பில்லியன் யூரோ என்ற அளவுக்கு உயர்த்தும் என பிரிட்டன் அரசாங்கம் கூறுகிறது.
இந்த ஒப்பந்தத்துக்கு இந்திய அமைச்சரவை இந்த வாரத் தொடக்கத்தில் ஒப்புதல் அளித்தது. ஆனால், இன்னமும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவில்லை. இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வர குறைந்தபட்சம் ஓராண்டு ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும்போது குறைவான வரி விதிக்கப்படும் பொருட்கள்:
உறைந்த இறால்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள்நகைகள் மற்றும் ரத்தினங்கள்பிரிட்டன் நிறுவனங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதியை விரிவாக்குவதால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி மற்றும் உருவாகும் வேலைவாய்ப்புகள் குறித்தும் பிரிட்டன் அரசு சுட்டிக்காட்டியது.
பிரிட்டன் ஏற்றுமதியில் குறைவான வரி விதிப்பை பெறவுள்ள பொருட்கள்:
வான்வெளி, மின்னணு மற்றும் மருத்துவ உபகரணங்கள்ஆடுகள், சால்மன் மீன் (Salmon), சாக்லேட்டுகள் மற்றும் பிஸ்கட்கள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பிரிட்டன் ஏற்றுமதி செய்யும் உயர்ரக கார்கள், அழகு சாதனப் பொருட்களுக்கு குறைவான வரி விதிக்கப்படும்பிரிட்டன் ஏற்கெனவே இந்தியாவில் இருந்து 11 பில்லியன் யூரோ மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்கிறது. ஆனால் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள வரிக் குறைப்பு உயர் தொழில் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் உள்ளிட்ட இந்திய ஏற்றுமதிகளை மலிவாக்கும்.
பிரிட்டனின் மின்சார வாகனம் மற்றும் ஹைபிரிட் வாகனத்துக்கான சந்தைகள் இந்திய தயாரிப்பாளர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு பிரிட்டன் ஏற்றுமதிகளுக்கான சராசரி வரிகள் 15% என்பதில் இருந்து 3% ஆகக் குறையும். இதனால் பிரிட்டிஷ் நிறுவனங்கள் இந்தியாவில் பொருட்களை விற்பது எளிதாகும்.
இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் விஸ்கி மீதான வரிகள் 150% என்பதில் இருந்து 75% வரை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது இந்திய சந்தையில் பிற சர்வதேச போட்டியாளர்களைவிட பிரிட்டனுக்கு கூடுதல் சாதகத்தைக் கொடுக்கிறது. அதுமட்டுமின்றி, 2035க்குள் இந்த வரி 40% ஆகக் குறையும்.
பாதுகாப்பு, கல்வி, காலநிலை, தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் நெருக்கமான ஒத்துழைப்பை மேற்கொள்ள இரண்டு பிரதமர்களும் ஒப்புக்கொண்டனர்.
அதோடு, இரு நாடுகள் இடையே மேம்பட்ட புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்துகொள்வது, செயல்பாடுகளில் ஒத்துழைப்பது ஆகியவை, ஊழல், கடுமையான மோசடி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், முறையற்ற குடியேற்றங்கள் ஆகியவற்றைக் கையாள உதவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்த ஒத்துழைப்பில், குற்றவியல் பதிவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான புதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வதும் அடங்கும். அது, துல்லியமான கண்காணிப்புப் பட்டியல்களைப் பராமரிக்கவும், பயணத் தடைகளை அமல்படுத்தவும் உதவும்.
இதியாவின் நிதி மற்றும் சட்ட சேவைத் துறைகளில் பிரிட்டன் விரும்பிய அளவுக்கு இந்த ஒப்பந்தம் அனுமதி அளிக்கவில்லை. அதோடு, பிரிட்டிஷ் முதலீடுகளை இந்தியாவிலும், இந்திய முதலீடுகளை பிரிட்டனிலும் பாதுகாக்கும் இரு தரப்பு முதலீட்டு ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடர்கின்றன.
இந்தியாவின் இறக்குமதிகளை நியாயமற்ற முறையில் பாதிக்கக்கூடும் என்று இந்தியா நம்பக்கூடிய, அதிக அளவில் கரிம வாயுவை வெளியிடும் தொழில்களுக்கு பிரிட்டன் விதிக்கத் திட்டமிட்டுள்ள வரி குறித்து இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்த ஒப்பந்தம் மே மாதம் ஒப்புக்கொள்ளப்பட்டபோது, தேசிய காப்பீட்டுப் பங்களிப்புகளுக்கு நீட்டிக்கப்பட்ட விலக்கு “முன்னெப்போதும் இல்லாத ஒரு சாதனை” என்று இந்திய அரசு வரவேற்றது.
பிரிட்டனுக்கு தற்காலிகமாக மாற்றப்படும் இந்திய நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் இந்தியாவில் தற்காலிகமாகப் பணிபுரியும் பிரிட்டன் நிறுவனங்களின் ஊழியர்கள், இரு இடங்களிலும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்புகளைச் செலுத்துவதற்குப் பதிலாக, அவர்களின் சொந்த நாட்டில் மட்டுமே பங்களிக்க வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் பொருள்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகள், காலணிகள் ஆகியவற்றின் மீது விதிக்கப்படும் வரி குறையும்இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட 17 நாடுகளுடன் இதேபோன்ற “இரட்டைப் பங்களிப்பு மரபு” பரஸ்பர ஒப்பந்தங்கள் ஏற்கெனவே உள்ளன என்று பிரிட்டன் அரசு வலியுறுத்தியது.
இந்த ஒப்பந்தத்தால் மலிவான இந்திய தொழிலாளர்களால் பிரிட்டிஷ் தொழிலாளர்கள் பாதிக்கப்படலாம் என்ற கருத்துக்கு பிபிசி பிரேக்ஃபாஸ்ட் நிகழ்ச்சியில் பதிலளித்த ரெனால்ட்ஸ், “இது உண்மையல்ல என்று நான் உறுதியாகக் கூற முடியும்,” எனக் கூறினார்.
“ஒரு பிரிட்டிஷ் தொழிலாளிக்கு பதிலாக இந்திய தொழிலாளியை நியமிப்பதால் எந்த வரி நன்மையும் கிடையாது.”
விசாக்கள் மற்றும் தேசிய சுகாதார சேவையின் கட்டணத்துக்குக் கூடுதல் செலவுகள் இருப்பதால், “ஒரு இந்திய தொழிலாளிக்கு நீங்கள் உண்மையில் கூடுதலாகச் செலவிட வேண்டியிருக்கும். ஆகவே, பிரிட்டிஷ் தொழிலாளர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை,” என்று அவர் கூறினார்.
இது, 2014இல் பிரதமரான பிறகு மோதி பிரிட்டனுக்கு மேற்கொள்ளும் நான்காவது பயணம். தொலைத்தொடர்பு பாதுகாப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் கூட்டுப் பணியை அனுமதித்த பிரிட்டன்-இந்தியா தொழில்நுட்பப் பாதுகாப்பு முன்னெடுப்பில் மோதி மற்றும் பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாமி கையெழுத்திட்டு ஓராண்டுக்குப் பிறகு தற்போதைய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2022இல் தொடங்கிய இந்த வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் மூன்று ஆண்டுகள் நடைபெற்றுள்ளன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு