திருமலையின் கன்னியா பகுதியை ஆக்கிரமித்துவிட பௌத்த அமைப்புக்கள் தொடர்ந்தும் முனபை;பு காண்பித்தேவருகின்றன.

இந்நிலையில் வெந்நீரூற்று சிவன் ஆலயத்தில், ஆடி அமாவாசை பித்ரு கடமைகளை வியாழக்கிழமை (24) முன்னெடுக்கவிடாது பௌத்த பிக்கு ஒருவர் அடாவடியில் ஈடுபட்டமை அம்பலமாகியுள்ளது.

சிவன் கோவிலில் ஆடி அமாவாசை பிதுர்கடன் நிறைவேற்றுவதற்கான பூஜைகள் வரை நடத்துவதற்குரிய அனுமதி உத்தியோகபூர்வமாக ஏற்பாட்டுக் குழுவினருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்து மதகுருக்கள் தமக்கு தானம் வழங்கப்பட்ட பொருட்களை ஏற்றுவதற்கு முச்சக்கர வண்டி ஒன்றை அழைத்த போது பௌத்த பிக்கு அங்கு வந்து வாகனத்தை மிரட்டி வெளியேற்றியுள்ளார்.

பூஜை நடைபெற்ற கோயிலுக்கு கன்னியா வெந்நீரூற்றுக்கு செல்லும் பிரதான வாசலுக்கு இடையில் முழுமையாக சிங்கள வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர்.இந்நிலையில் கன்னியா பகுதியை ஆக்கிரமித்துவிட பௌத்த அமைப்புக்கள் தொடர்ந்தும் முனைப்பு காண்பித்தேவருகின்றன.