Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இந்திய பெண்கள் அறிவியல் துறையில் சாதிப்பதை திருமணமும், குழந்தையும் தடுக்கிறதா?
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமிபதவி, பிபிசி தமிழ்17 நிமிடங்களுக்கு முன்னர்
‘இந்திய பெண்கள் சமையலறைகளில் இருந்து வெளியேறி விண்வெளி வரை சென்றுவிட்டார்கள்.’
இதுதான் பெண்கள் முன்னேற்றம் குறித்துப் பேசும் அனைவரும் கூறும் பொதுவான கருத்து. இந்தக் கருத்தை ஆதரிக்கும் சமீபத்திய உதாரணங்களும் உள்ளன.
குறிப்பாக, இந்திய விண்வெளித் துறையில் கனவுத் திட்டங்கள் சிலவற்றை வழிநடத்துபவர்கள் பெண்களாக உள்ளனர். ஆதித்யா எல்1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி மற்றும் சந்திரயான் 3 துணை திட்ட இயக்குநர் கே.கல்பனா போன்றோரை உதாரணங்களாகக் கொள்ளலாம்.
ஆனால், ஸ்டெம் (STEM) எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் போன்ற துறைகளில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவின் லட்சியவாத கனவுகளுக்கும் எதார்த்தத்துக்கும் இடையிலான இடைவெளியை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
கடந்த 2024ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் அறிவியல் துறையில் பெண்களின் சாதனைகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அப்போதைய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், “முக்கிய அறிவியல் திட்டங்களில் பெண்கள் தற்போது தலைமைப் பொறுப்புகளை வகிக்கின்றனர். ஆதித்யா எல்1 மற்றும் சந்திரயான் 3 போன்ற திட்டங்களில் பெண்கள் தலைமைப் பொறுப்புகளில் உள்ளனர்” எனக் கூறினார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
ஸ்டெம் துறையும் சில எண்களும்
பட மூலாதாரம், Getty Images
“ஸ்டெம் (STEM) என சுருக்கமாக அழைக்கப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் போன்ற துறைகளில் 43% பெண்கள் படிக்கின்றனர். அவர்கள் இன்னும் சில ஆண்டுகளில் அந்தந்த துறைகளில் முக்கியப் பணிகளை வகிக்கும் நிலையில் இருப்பார்கள்” என ஜிதேந்திர சிங் கூறியிருந்தார்.
அதோடு, இந்தத் துறைகளில் எவ்வித பாலின பாகுபாடும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதேவேளையில், இந்தத் துறையில் பெண் விஞ்ஞானிகளின் பங்கேற்பு குறைவாக உள்ளதையும் அவர் ஒப்புக்கொண்டிருந்தார்.
“ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண் விஞ்ஞானிகள் 18.6% என்ற அளவிலேயே உள்ளதாகவும், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி சார்ந்த திட்டங்களில் 25% மட்டுமே பெண்கள் இருப்பதாகவும்” அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த 2023ஆம் ஆண்டு நேச்சர் ஆய்விதழில் வெளியான ஆய்வறிக்கை ஒன்றில், இந்தியா முழுவதும் உள்ள 98 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 16.7% பெண்கள் மட்டுமே ஸ்டெம் துறையில் பணிபுரிகின்றனர் எனத் தெரிய வந்தது.
உலகப் ஒஸ்டெம் (STEM) என சுருக்கமாக அழைக்கப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் போன்ற துறைகளில் 43% பெண்கள் படிக்கின்றனர். அவர்கள் இன்னும் சில ஆண்டுகளில் அந்தந்த துறைகளில் முக்கியப் பணிகளை வகிக்கும் நிலையில் இருப்பார்கள்” என ஜிதேந்திர சிங் கூறியிருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
அதோடு, இந்தத் துறைகளில் எவ்வித பாலின பாகுபாடும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதேவேளையில், இந்தத் துறையில் பெண் விஞ்ஞானிகளின் பங்கேற்பு குறைவாக உள்ளதையும் அவர் ஒப்புக்கொண்டிருந்தார்.
“ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண் விஞ்ஞானிகள் 18.6% என்ற அளவிலேயே உள்ளதாகவும், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி சார்ந்த திட்டங்களில் 25% மட்டுமே பெண்கள் இருப்பதாகவும்” அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த 2023ஆம் ஆண்டு நேச்சர் ஆய்விதழில் வெளியான ஆய்வறிக்கை ஒன்றில், இந்தியா முழுவதும் உள்ள 98 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 16.7% பெண்கள் மட்டுமே ஸ்டெம் துறையில் பணிபுரிகின்றனர் எனத் தெரிய வந்தது.
உலகப் பொருளாதார அமைப்பு 2023ஆம் ஆண்டு வெளியிட்ட பாலின இடைவெளி அறிக்கையின்படி, இந்தியாவில் ஸ்டெம் துறையில் 43% பெண்கள் பட்டம் பெற்றவர்களாக உள்ளனர். ஆனால், 27% பெண்கள் மட்டுமே அந்தத் துறையில் பணியாற்றுவதாகக் குறிப்பிடுகிறது.
இவை மிகக் குறைந்த அளவிலான தரவு மட்டுமே. திருமணம், குழந்தை போன்ற விஷயங்கள் எல்லா துறைகளிலும் பெண்களுக்கு ஒரு தடையாக இருந்தாலும், ஸ்டெம் துறையில் இருக்கும் பெண்களுக்கு அது இன்னும் ஆழமான பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
ஒருபுறம், நிச்சயமாக இந்த துறையைத் தேர்ந்தெடுத்து படிக்கும் பெண்கள் அதிகமாக இருக்கின்றனர். வீடுகளிலும் இந்த துறை குறித்த பார்வை மாறியுள்ளது. ஆனாலும் தடையாக இருப்பது எது?
பாலின பாகுபாடு
பட மூலாதாரம், jncasr
படக்குறிப்பு, ‘பணியிடங்களில் நிலவும் பாகுபாடே முதன்மையான காரணம்’ என்கிறார் ஷோபனா நரசிம்மன்சமூகக் கட்டுப்பாடுகள் முக்கியக் காரணமாக இருந்தாலும், இந்தத் துறைகளில் பெண்கள் குறைவாகப் பணியாற்றுவதற்கு பணியிடங்களில் நிலவும் பாகுபாடு முதன்மைக் காரணமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார், பெங்களூருவில் உள்ள ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் தியரிட்டிக்கல் சயின்சஸ் துறையின் பேராசிரியர் ஷோபனா நரசிம்மன்.
“திருமணம், குழந்தைகள், குடும்ப அழுத்தங்கள் நிச்சயமாக முக்கியக் காரணமாக உள்ளன. ஆனால், ஸ்டெம் துறையில் பெண்களை பணிக்கு எடுப்பதில் நிச்சயமாகப் பாகுபாடுகள் உள்ளதாக” கூறுகிறார் ஷோபனா நரசிம்மன். இவர் ஸ்டெம் துறையில் பெண்கள் பணிபுரிவதை ஆதரிப்பது தொடர்பாகப் பல்வேறு பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார்.
குழந்தை பேறுக்காக பணியில் இருந்து இடைவெளி எடுத்துவிட்டு வரும் பெண்கள், திறமையாக வேலை செய்ய மாட்டார்கள் என்ற பார்வை இந்தத் துறையில் அதிகமாக உள்ளதாகக் குறிப்பிடுகிறார் அவர்.
ஸ்டெம் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்யும் வகையிலான உதவித்தொகை மற்றும் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டங்கள் பல இருந்தாலும் அவற்றுக்குப் பெரும்பாலும் 30-35 எனும் வயது வரம்பு உள்ளதாக இத்துறையில் உள்ள பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பணியிடங்களில் குழந்தைகள் பராமரிப்புப் பகுதி அமைக்கப்பட வேண்டும் என்று சில நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.இந்த வயதில் இந்தியா போன்ற நாட்டில் பெரும்பாலான பெண்கள் இளம் தாய்மார்களாக இருப்பார்கள் என்பதால், இத்தகைய திட்டங்கள் அவர்களைச் சென்றடைவதில் சில பின்னடைவுகள் இருப்பதாகவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
“ஸ்டெம் துறையில் உள்ள இளம் பெண்களுக்கு 2-3 ஆண்டுகள் நிதியளிக்கும் வகையிலான உதவித் திட்டங்கள் உள்ளன. ஆனால், அதற்குப் பின்பு அவர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன” என்கிறார் ஷோபனா நரசிம்மன்.
இதே கருத்தை வலியுறுத்துகிறார் சென்டர் ஃபார் ஹியூமன் ஜெனிட்டிக்ஸில் புற்றுநோய் உயிரியலில் ஆய்வு மேற்கொண்டு வரும் மூத்த விஞ்ஞானி ராதிகா நாயர்.
சமூக மற்றும் குடும்ப அழுத்தங்களால் தங்களுடைய 20-30 வயதுகளில் துறையை விட்டு வெளியேறும் பெண்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.
ராதிகா நாயரும் பல சவால்களை எதிர்கொண்டிருக்கிறார். தன்னுடைய 20 வயதில் குடும்ப வன்முறையை எதிர்கொண்டவர் ராதிகா.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுப் படிப்பில் இருந்தபோது, வன்முறையை எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருந்தது. பல்வேறு தடைகளுக்குப் பிறகு இந்தியா வந்த ராதிகா, தனது மகனை தனி ஆளாக வளர்த்துக் கொண்டே இந்த உயரத்தை அடைந்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
பெங்களூருவை சேர்ந்த அறிவியல் எழுத்தாளர் நந்திதா ஜெயராஜ், 2023ஆம் ஆண்டில், ‘லேப் ஹாப்பிங்: வுமென் சயின்டிஸ்ட்ஸ் இன் இந்தியா’ எனும் புத்தகத்தை எழுதினார்.
அறிவியல் துறையில் நிலவும் பாலினப் பாகுபாடுகளை, இந்தியாவின் பல முக்கியமான பெண் விஞ்ஞானிகளையும் அறிவியல் துறையில் புதிதாக நுழையும் பெண்களிடமும் நேர்காணல்கள் செய்து அந்த நூலில் ஆவணப்படுத்தினார்.
“பாலின ரீதியிலான கட்டுப்பாடுகளால், வெவ்வேறு புதுவித அனுபவங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் பெண்களுக்கு கிடைப்பதில்லை. வழக்கம் போல சமூகம், குடும்பத்தின் மீது பழிபோடப்படுகிறது.
ஆனால், நிறுவனங்கள் பெண்களை அணுகும் விதம் மாற வேண்டும். இயந்திரப் பொறியியல், கட்டடப் பொறியியல் ஆகிய துறைகளில் பெண்களால் சிறப்பாகச் செயல்பட முடியாது என்ற பார்வை உள்ளது. இவை மாற வேண்டும்” என்கிறார் எழுத்தாளர் நந்திதா.
பணிக்கு எடுப்பதில் தயக்கம்
பட மூலாதாரம், Nandita Jayaraj/Facebook
படக்குறிப்பு, ‘லேப் ஹாப்பிங்: வுமென் சயின்டிஸ்ட்ஸ் இன் இந்தியா’ எனும் புத்தகத்தின் ஆசிரியர் நந்திதா ஜெயராஜ் தனது நூலுக்காக நந்திதா ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் இயக்குநராக உள்ள பெண் விஞ்ஞானி ஒருவரை நேர்காணல் செய்துள்ளார்.
“அந்த இயக்குநரே சில நேரங்களில் ஆய்வு சார்ந்த வேலைகளுக்கு இளம் தாய்மார்களை பணிக்கு எடுப்பதில்லை எனத் தெரிவித்துள்ளார். ஏனெனில், ஆய்வகங்களில் பல நேரங்களில் இரவு நேரத்தில் ஆய்வு செய்ய வேண்டியிருக்கும்.
ஆனால், இளம் தாய்மார்களால் வெகுநேரம் ஆய்வகங்களில் இருக்க முடியாது என்ற பார்வை உள்ளது. குடும்பங்களில் உள்ள கட்டுப்பாடுகளும் அவ்வாறுதான் இருக்கின்றன,” என்கிறார் நந்திதா ஜெயராஜ்.
இதுகுறித்துப் பேசிய பேராசிரியர் ஷோபனா, “அறிவியல் துறை என்றாலே வார இறுதி நாட்களிலும் வேலை செய்ய வேண்டும் என்ற பார்வை உள்ளது, அது மாற வேண்டும்” என்கிறார்.
அதோடு, பணியிடங்களில் மட்டுமல்லாமல் பல கருத்தரங்குகளிலும் பெண் விஞ்ஞானிகளின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார் அவர்.
இந்தியாவின் அறிவியல் மாநாட்டில் (Indian science congress) போதிய பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்தால், பெண்கள் அறிவியல் மாநாட்டை (Indian women science congress) உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“ஆனால், பெண்களுக்கென தனியே அவ்வாறு அமைப்பை உருவாக்காமல், ஏற்கெனவே உள்ள அமைப்பில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்துவதே சரியான நகர்வு” என்பதையும் வலியுறுத்தினார் பேராசிரியர் ஷோபனா.
பட மூலாதாரம், Getty Images
இந்தத் துறையில் பணி உயர்வு, முடிவுகளை எடுக்கும் இடங்களில் பெண்கள் பெரும்பாலும் குறைவாகவே இருப்பதாகக் குறிப்பிடுகிறார் விஞ்ஞானி ராதிகா நாயர்.
ராதிகாவின் கூற்றுப்படி, இந்தியாவில் அறிவியல் துறையில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதை இதுவரை 583 பேர் வாங்கியுள்ளனர், அவர்களுள் 19 பேர் மட்டுமே பெண்கள்.
கல்வி நிறுவனங்களில் அறிவியல் துறைகளில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை இன்னும் கவலைதரக்கூடிய விதத்திலேயே உள்ளது.
அமெரிக்காவில் இயற்பியல் துறையில் 16%, பொறியியல் துறையில் 16.5%, கணிதத்தில் 25% மட்டுமே பெண்கள் உள்ளன. உலக அளவில்கூட 35% பெண்கள் மட்டுமே ஸ்டெம் துறையை தேர்வு செய்து, படிக்கின்றனர்.
போதுமான வழிகாட்டுதல்கள், பணியிடங்களில் கடுமையான விதிமுறைகள், தலைமைப் பொறுப்புக்கு வருவதற்கான குறைவான வாய்ப்புகள் உள்ளிட்டவை இந்தியாவில் இல்லை என்பதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
குழந்தை வளர்ப்பில் கூடுதல் பொறுப்பு
பட மூலாதாரம், Getty Images
பெண்கள், குறிப்பாக இளம் தாய்மார்கள் அறிவியல் துறை மட்டுமின்றி வேறெந்த துறையாக இருந்தாலும் அவர்கள் பணி செய்வதை ஊக்குவிக்க வேண்டும்.
அதற்காக, பணியிடங்களில் குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பொருட்டு ‘கிரஷ்’கள்(குழந்தை பராமரிப்புப் பகுதி) அமைப்பது ஒரு தீர்வாக முன்வைக்கப்படுகிறது.
ஆனால், அதுவும் “குழந்தை வளர்ப்பு என்றாலே பெண்கள்தான் அதிமுக்கிய பொறுப்பானவர்கள்” என்ற கண்ணோட்டம் கொண்டதாகவே இருப்பதாக” நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால் பேராசிரியர் ஷோபனாவின் கூற்றுப்படி, இந்தியா போன்று தாய்மை, குழந்தை வளர்ப்பை பெண்களுடன் மட்டுமே இணைத்துப் பார்க்கும் சமூகத்தில், ஓரளவுக்கு பணிக்குச் செல்லும் பெண்களுக்கு ‘கிரெஷ்’கள் முக்கியம்தான்.
இருப்பினும் அவர், “பல நிறுவனங்களில் கிரெஷ்கள் நன்றாக இல்லை. பல நிறுவனங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பெண் பணியாளர்கள் இருந்தால்தான் கிரஷ்கள் அமைக்க வேண்டும் என்ற விதிமுறைகளும் உள்ளன” என்றார்.
மகப்பேறு பலன்கள் திருத்த சட்டம், 2017இன் படி, 50 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் இருக்கும் நிறுவனங்களில், குறிப்பிட்ட தொலைவுக்குள் கிரஷ்கள் அமைக்கப்பட வேண்டும் என்கின்றது.
“ஆனால், அறிவியல் துறைகளில் பெண்களை வேலைக்கு எடுப்பதே குறைவாக இருக்கும்போது, நிறுவனங்களில் குறைவாகத்தான் பெண்கள் இருப்பார்கள். எனவே, பெரும்பாலும் அங்கு கிரஷ்கள் அமைக்கப்படாது,” என்கிறார் ஷோபனா நரசிம்மன்.
இது ஒருபுறமிருக்க, ஆண் பணியாளர்களை மையப்படுத்தியும் கிரஷ்கள் அமைக்கப்பட வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.சமீபத்தில் ஐஐடி கோரக்பூரில் வெளியான அறிவிப்பு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. அங்கு, பணியாற்றும் பெண் பணியாளர்களுக்கு (கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத பணியாளர்கள்), மன அழுத்தத்தில் இருக்கும் மாணவர்களுக்கு உளரீதியாக ஆதரவு தருவதற்கான பயிற்சிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்திற்கு ‘கேம்பஸ் மதர்ஸ்’ எனப் பெயரிடப்பட்டது. இது பெண்கள் மட்டும்தான் இத்தகைய பணிகளைச் செய்ய முடியும் என்ற பாலின கண்ணோட்டத்தில் இருப்பதால், ஐஐடி நிறுவனத்திற்கு உள்ளேயே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
“அரசின் கொள்கைகள், திட்டங்களைவிட சமூகத்திலும் பணியிடங்களிலும் நிலவும் மனப்பான்மை முதலில் மாற வேண்டும் என நினைக்கிறேன். சுவீடனில் தாய், தந்தை இருவருக்கும் ஒரே அளவில் மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதாவது, எத்தனை மாதங்கள் ஒரு தாய் மகப்பேறு விடுமுறை எடுக்கிறாரோ, அதே அளவுக்கு தந்தையும் எடுக்க வேண்டும். இந்தியாவில் அப்படி இல்லையே!” என்கிறார் ஷோபனா நரசிம்மன்.
இந்தியாவில் ஆண்களுக்கு 15 நாட்கள் மகப்பேறு விடுமுறை வழங்கப்படுகிறது. “ஆனால் அதையும் சிலர் எடுப்பதில்லை” என்கிறார் அவர்.
“ஆண்களின் மூளையைவிட பெண்களின் மூளை வித்தியாசமானது அல்ல என்பதைப் புரிந்துகொண்டால் மட்டுமே, அறிவியல் துறைகளில் பெண்களை பணிக்கு எடுப்பதில் நிறுவனங்கள் காட்டும் தயக்கம் நீங்கும்” என்கிறார் எழுத்தாளர் நந்திதா.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு