Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தமிழர்களுடைய மரபுரிமை சின்னங்கள் வழக்கொழிந்து போகின்ற நிலையில் காணப்படுகின்றது, பல்வேறுபட்ட ஆலயங்கள் இன்று நவீனமயப்படுத்தப்பட்டு வருகிறது, அவ்வாறானநிலையில் புராதான சின்னங்கள் அவற்றை விட்டு அகன்று போகின்ற தன்மை காணப்படுகிறது. என யாழ் . மாவட்ட செயலர் ம. பிரதீபன் அழைப்பு விடுத்துள்ளார்.
தொல்லியல் திணைக்களத்தின் 135 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தொல்லியல் தின நிகழ்வு யாழ் கோட்டை வளாகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எமது வரலாற்று தொல்லியல் மரபுரிமை சின்னங்கள் மற்றும் மரபுரிமை மையங்களை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும். தொல்லியல் மையங்கள் சுற்றுலாத் துறையுடன் இணைந்த வகையில் செயற்படுத்தும் போது மக்கள் இது தொடர்பில் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமையும்.
யாழ் மரபுரிமைச் சின்னங்களை பார்வையிடுவதை மக்கள் இன்று குறைத்துக் கொண்டு செல்கின்றார்கள். பல்வேறுபட்ட தொல்லியல் சின்னங்கள் வரலாற்று பெறுமதி மிக்கவை . மிகப் பெறுமதியான பொக்கிசமாக யாழ்ப்பாணக் கோட்டை காணப்படுகின்றது.
ஆனால் எமது யாழ்ப்பாண மக்கள் அதனை பார்வையிடுவது குறைவாகவுள்ளது. காலிக் கோட்டை போல பல்வேறு சுற்றுலாசார் செயற்பாடுகளைக் கொண்ட கோட்டையாக யாழ்ப்பாணக் கோட்டையினை மாற்ற வேண்டும். அதற்கான முயற்சிகளும் எம்மால் எடுக்கப்பட்டுவருகிறது.
ஒரு வாழும் கோட்டையாக யாழ்ப்பாணக் கோட்டையை மாற்றி தமிழ் மரபுரிமைகளை உள்ளடக்கிய கலையம்சங்களை யாழ்ப்பாண கோட்டையில் உள்ளடக்குவதன் மூலம் தமது வாழ்வியலின் குறிப்பிட்ட ஒரு நேரத்தை யாழ்ப்பாண கோட்டையில்கழிப்பதற்கு பலர் முன்வருவார்கள்.
மேலும், எங்களுடைய மாவட்டத்திலே பல தொல்லியல் சின்னங்கள் இருந்தாலும் மந்திரி மனை போல பல சின்னங்கள் நிலம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது.
தமிழர்களுடைய மரபுரிமை சின்னங்கள் வழக்கொழிந்து போகின்ற நிலையில் காணப்படுகின்றது, பல்வேறுபட்ட ஆலயங்கள் இன்று நவீனமயப்படுத்தப்பட்டு வருகிறது, அவ்வாறானநிலையில் புராதான சின்னங்கள் அவற்றை விட்டு அகன்று போகின்ற தன்மை காணப்படுகிறது.
மரபுரிமையுடனான சுற்றுலா மேம்பாட்டுக்கு அமையை, எமது பழைய கச்சேரியினை உலக வங்கியின் அனுசரணையில் புனரமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினுடைய பங்கு பல்வேறுபட்ட விடயங்களில் கிடைத்து வருகிறது.
எமது மரபுரிமைகளைப் பேணுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனத் தெரிவித்தார்.