முல்லைதீவின் கரைத்துரைப்பற்று பிரதேசசபை தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியும் பிரிந்து நின்று மோதி தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடம் ஏற வழிவகுத்தனர்.இன்று அதே கட்சியின் தலைமைகள் தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவது தொடர்பில் ஒற்றுமையாக இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பேச்;சுக்களை நடாத்தியுள்ளனர்.தமிழ் பிரதேச சபையினை தக்க வைப்பதற்கு ஒற்றுமைப்பட தயாராக இல்லாத தரப்புக்கள் இன்று இந்தியா வெளிவிவகார அமைச்சரிற்கு முன்னால் ஒற்றுமையாக படையெடுத்தமை விமர்சனங்களிற்குள்ளாகியுள்ளது. இதனிடையே இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மீள் கட்டமைப்புக்கான திட்டமொன்றை இந்தியா அறிவித்துள்ளது. அதில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகை அடிப்படையிலான கடன் திட்டமாகவும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையாகவும் இலங்கைக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய இந்திய அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் உதவி அறிவிப்பை விடுத்துள்ளார்.
வக்கற்றவர்களது கூட்டிணைவு?
7