Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மரபுச் சுற்றுலா மேம்பாடு மற்றும் தொடர்ச்சியாக பேணுதல் என்ற அடிப்படையில் பழைய கச்சேரியினை புனரமைப்பு செய்தல் தொடர்பாக மாவட்ட செயலருடன் உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர் நேற்றைய தினம் திங்கட்கிழமை (21.07.25) பழைய கச்சேரியினை பார்வையிட்டு ஆராய்ந்தனர்.
இதற்கு முன்னராக மாவட்டச் செயலகத்தில் உலக வங்கி குழுவினருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் சுற்றுலாத் துறை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பழைய கச்சேரி மற்றும் யாழ்ப்பாண கோட்டை புனரமைப்பின் அவசியம் தொடர்பாக – உலக வங்கி குழுவினரிடம் மாவட்ட செயலரினால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அந்நிலையிலேயே உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர் பழைய கச்சேரி கட்டடத்தினை பார்வையிட்டுள்ளனர்.
மேலும், வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் உட்கடுமாணம் மற்றும் சுற்றுலாத்துறையினை விருத்தி செய்தல் தொடர்பிலான ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமைவாக, கடந்த இரு மாதங்களாக வடக்கின அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் செயற்றிட்டங்களையும் அதன் சாத்தியநிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.