இலங்கையை கடந்த நவம்பர் இறுதியில் தாக்கிய ‘டித்வா’ புயல், நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. 💰 பொருளாதார இழப்பு விபரங்கள்: மொத்த சேதம்: 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கையின் GDP-யில் 4%). உட்கட்டமைப்பு: வீதிகள், பாலங்கள் மற்றும் மின்சார வலையமைப்புகளுக்கு 1.735 பில்லியன் டொலர் சேதம் (42%). விவசாயம்: 814 மில்லியன் டொலர் இழப்பு (உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்). வீடுகள்: குடியிருப்புகள் மற்றும் உடமைகளுக்கு 985 மில்லியன் டொலர் சேதம். 🏘️ அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள்: இலங்கையின் 25 மாவட்டங்களில் சுமார் 2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கண்டி மாவட்டம் (689 மில்லியன் டொலர் சேதம்) மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளே இந்த பாரிய அழிவுகளுக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் இதுவே மிகவும் அழிவுகரமான இயற்கை அனர்த்தம் என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. #CycloneDithva #SriLanka #WorldBank #EconomicCrisis #DisasterRelief #Kandy #SriLankaNews #Agriculture #Infrastructure #TamilNews #ClimateChange
🌪️ 'டித்வா' புயல்: இலங்கைக்கு 4.1 பில்லியன் டொலர் நேரடிச் சேதம் – உலக வங்கி அறிக்கை! 📉🇱🇰 – Global Tamil News
4