3
முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று பிரதேச சபை தேசிய மக்கள் சக்தியின் வசம் சென்றுள்ளது. நடந்து முடிந்த முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அடிப்படையில் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் சின்னராசா லோகேஸ்வரன் தவிசாளராக தெரிவு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.இந்நிலையில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சி.லோகேஸ்வரன் கடந்த நவம்பர் மாத இறுதிப் பகுதியில் தனது பதவியினை இராஜினாமா செய்தார். அதன் அடிப்படையில் புதிய தவிசாளரை தேர்தெடுப்பது தொடர்பில் இன்றைய தினம் திங்கட்கிழமை வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சுதர்சன் தலைமையில் தவிசாளர் தெரிவு கூட்டம் இடம்பெற்றது. அதன் போது, தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டவர்களில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இமக்குலேற்றா புஸ்பானந்தன்தவிசாளராக தெரிவானார்.