தையிட்டியில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெற்ற கைது நடவடிக்கைகளைக் கண்டித்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று பல்கலைக்கழகத்தின் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். 📢 மாணவர்களின் கோஷங்கள்: “தையிட்டி எங்கள் சொத்து – எங்கள் காணிகளை அபகரிக்காதே!” பலாத்காரமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை உடனடியாக அகற்ற வேண்டும். மக்களின் பூர்வீக நிலங்கள் மக்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும். 🔥 காவல்துறையினரின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம்: நேற்றைய தினம் தையிட்டியில் அமைதி வழியில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட காட்டுமிரண்டித்தனமான தாக்குதல்கள் மற்றும் கைது நடவடிக்கைகளை மாணவர்கள் வன்மையாகக் கண்டித்தனர். ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை அடக்க முற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என மாணவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர். இப்போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பெருமளவிலானோர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினைப் பதிவு செய்தனர். #JaffnaUniversity #Jaffna #StudentsProtest #Thaiyitti #LandGrab #Justice #SriLankaNews #UniversityStudents #TamilNews #HumanRights
🪧 தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய போராட்டம்! 🎓✊ – Global Tamil News
4