தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக பயணித்த இரு இளைஞர்கள் மற்றுமொறு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் , ஒரு இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் , நால்வர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் , புத்தூர் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிறுக்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் தலைக்கவசம் இன்றி மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் வீதி வளைவில் மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்ட வேளை மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்டிய , புத்தூர் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் வினோஜன் (வயது 25) எனும் இளைஞன் தலையில் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். குறித்த இளைஞனுடன் பயணித்த மற்றைய இளைஞனும் , எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் வந்த , தாய் – தந்தை மற்றும் அவர்களின் சிறிய மகன் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழில். தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் வேகமாக பயணித்த இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழப்பு
8