Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இலங்கையின் பெருமிதங்களுள் ஒன்றாக மட்டக்களப்புக் கைத்தறி திகழ்ந்த காலம் ஒன்றிருந்தது. இன்று கைத்தறி;த்துறை கிழக்கில் மீள எழுச்சி பெற்றாலும் எம்மவரால் பாவிக்கப்படுவதும் பெழுமிதப்படுத்தப்படுவது மிகவும் குறைவு.
நாங்கள் வெளிநாட்டு ஆடைகளின மோகத்தில் வாழ்கின்Nறூம். புப்பளவென மினுங்குபவையும் – சரிகையுமே அழகு என்று எங்கள் கண்களுக்குப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன.
நாங்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை வெள்நாடுகளுக்கு அந்நியச்செலாவணியாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
எங்களது பொருளாதாரம் மேம்படவேண்டுமெனில் எங்களது உற்பத்திகள் வாங்கப்பட வேண்டும் பாவிக்கப்பட வேண்டும்
நாங்கள் உற்பத்தி செய்து, நாங்கள் வடிவமைத்து, நாங்கள் பெருமிதத்துட்ன அணிபவையே எங்கள் பண்பாடாக முடியும். எங்கள் பண்பாடு எங்கள் உற்பத்திகளில் இருக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக எங்களது வெப்பமான சூழலில் பருத்தி நெசவு ஆடைகளே எங்களது உடல்நலனுக்கும ஏற்றவை. அதிலும் நாம் மறந்து போன இயற்கை சாயங்களை மீட்டெடுப்போமெனில் அவையால் உடலுக்கும் சூழலுக்கும் இன்னும் பல நலன்கள் கிட்டும்.
எங்கள் உடல்நலனுக்கும்,; எங்கள் பொருளாதாரத்துக்கும் பண்பாட்டுக்கும் வலு சேர்க்கும் உள்ளூர் உற்பத்திகளில் நாம் தங்கி வாழ்வோம்!!
செம்பருத்திக் கலையாக்கங்கள் – மட்டக்களப்பு