நூறு மடங்கு குறைந்த செலவில் உருவான இன்குபெட்டர் பல ஆயிரம் குழந்தைகளை காப்பாற்றியது எப்படி?காணொளிக் குறிப்பு, ஆயிரக்கணக்கான குறைப்பிரசவ குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றிய மலிவு விலை இன்குபேட்டர்கள்நூறு மடங்கு குறைந்த செலவில் உருவான இன்குபெட்டர் பல ஆயிரம் குழந்தைகளை காப்பாற்றியது எப்படி?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மத்திய கிழக்கு நாடான கேமரூனில், எலியட்டும் எலியானாவும் குறைப் பிரசவத்தில் பிறந்தனர். இதனால் அவர்கள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டார்கள். கேமரூன் போன்ற வளர்ச்சியடையாத நாடுகளில் இன்குபேட்டர் வசதி என்பது அசாதாரணமானது.

இதற்காகவே, ஸ்பெயினைச் சேர்ந்த பாப்லோ பெர்காசா மலிவு விலை இன்குபேட்டர்களை உருவாக்கியுள்ளார். அவையே கேமரூனில் பயன்படுத்தப்பட்டது.

தனது இன்குபேட்டர்கள் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்வதாகவும் இதுவரை சுமார் 5,000 குழந்தைகளை காப்பாற்றியுள்ளதாகவும் பாப்லோ கூறுகிறார்.

இந்த இன்குபேட்டர்களை உருவாக்க 35,000 ரூபாய் செலவாகும். வணிக ரீதியானவற்றை விட இவை நூறு மடங்கு மலிவானவை.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு