தையிட்டி விகாரைக்கு அமைச்சர்!

வலிகாமம் வடக்கு தையிட்டி விகாரைக்கு அருகாமையில் உள்ள தனியார் காணிக்குள் புதிய கட்டுமானங்களிற்கென வெட்டப்படும் கிடங்குகளை தேசிய மக்கள் சக்தி அமைச்சர் பார்வையிட்டுள்ளார். வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் பிரசன்னத்தில் விகாரைக்கு வந்த அமைச்சர் குழுவினர்களையும் அழைத்துச் சென்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்டுமானங்களை காண்பித்துள்ளனர்.

ஏற்கனவே வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளராக தமிழரசுக்கட்சி சார்பு சுகிர்தன் இருந்திருந்த போதே விகாரை கட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.