கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் ருக்ஷான் பெல்லன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பணி நீக்கத்திற்கான பின்னணி என்ன? 🧐 சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள கடிதத்தின்படி, அவர் மீது சுமத்தப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டுகள்: 🚫 அனுமதியின்றி கருத்து தெரிவித்தல்: ஒரு பொறுப்பு வாய்ந்த அரச வைத்திய அதிகாரியாக இருந்துகொண்டு, உரிய அனுமதியின்றி பல்வேறு ஊடகங்களுக்குக் கருத்துக்களை வெளியிட்டமை. ⚠️ அமைதியின்மையை ஏற்படுத்துதல்: பொதுமக்களிடையே தேவையற்ற அச்சம் மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பகிர்ந்தமை. 📋 ஒழுக்காற்று மீறல்: முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், அரச சேவை விதிமுறைகளை மீறியமைக்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வைத்தியரின் பதில்: 🎙️ ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தான் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதை வைத்தியர் ருக்ஷான் பெல்லன, உறுதிப்படுத்தியுள்ளார். எதிர்காலத்தில் இது தொடர்பாக முறையான மேலதிக விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. #BreakingNews #SriLanka #HealthMinistry #DrRukshanBellana #ColomboNationalHospital #ActionTaken #LKA #சுகாதாரஅமைச்சு #இலங்கை #அதிரடி
🚨 Dr ருக்ஷான் பெல்லன பணி இடைநீக்கம்! 🏥🚫 – Global Tamil News
4