யாழ்ப்பாணத்தில் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  திருநெல்வேலி பகுதியை சேர்ந்த சுந்தரக்குருக்கள் ஞானசர்மா (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள பாதுகாப்பான புகையிரத கடவையில் புகையிரதம் வருவதற்காக கடவை மூடப்பட்டிருந்த போதிலும் , துவிச்சக்கர வண்டியில் கடவையை கடக்க முற்பட்டு புகையிரதத்துடன் மோதி படுகாயமடைந்திருந்தார்.  சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

Spread the love

  ஆலய குருக்கள்உயிரிழப்புதுவிச்சக்கர வண்டிபுகையிரத விபத்து