யாழ்.வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு 20 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.28 உறுப்பினர்களைக் கொண்ட யாழ்.வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் சபை அமர்வு, சபைத் தவிசாளர் கந்தையா யெசீதன் தலைமையில், நேற்றைய தினம் நடைபெற்றது.இதன்போது, 2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டினை சபையில் தவிசாளர் சபையில் சமர்ப்பித்தார்.அதனை தொடர்ந்து விவாதங்கள் இடம்பெற்ற நிலையில், வரவு செலவுத் திட்டத்திற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 8 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 4 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் 3 உறுப்பினர்களும், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலா 2 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு உறுப்பினர் என மொத்தமாக 20 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். தேசிய மக்கள் சக்தியின் 6 உறுப்பினர்களும் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் 2 உறுப்பினர்கள் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை.இந்த நிலையில் யாழ்.வலிகாமம் தேன்மேற்கு பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது.
மானிப்பாய் பிரதேச சபையின் பாதீடும் நிறைவேற்றப்பட்டது.
2