அனர்த்தம் காரணமாக மக்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரண பணிகளுக்கான பதிவுகளின் போது உத்தியோகத்தர்கள் சீராக செயற்படவில்லை என மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்களான உஷாந்தன் மற்றும் ரமணன் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.மானிப்பாய் பிரதேச சபையின் அமர்வு நேற்றைய தினம் புதன்கிழமை தவிசாளர் ஜெசீதன் தலைமையில் இடம்பெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தனர். உறுப்பினர்களின் குற்றச்சாட்டை அடுத்து, தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் ஒருவர், அரசாங்க அதிகாரிகள் இவ்வாறு தவறுகள், ஊழல்கள் செய்வது தமக்கு தெரிகிறது என்றும், மக்களுக்கு சேரவேண்டிய நிதி சேரவேண்டும் என்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.இதன்போது குறுக்கிட்ட உறுப்பினர் ரமணன், அநுரவை ஒரு சிங்கம் என்றும், தாங்கள் சிங்கத்தின் பிள்ளைகள் என்றும் இவர்கள் தங்களை தாங்கள் நினைக்கின்றனர். உங்களுடைய என்.பி.பி கட்சியினர்தான் கிராம சேவகரிடம் தனியாக லிஸ்ட் கொடுத்தனர். அதற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது என்றார்.அவ்வேளை உறுப்பினர் உஷாந்தன், கட்டுடையில் ஒரு இடைத்தங்கல் முகாம் இருந்தது. முதல்நாள் நான் அங்கே சென்று அங்குள்ள மக்களுக்கு நுளம்புவலை மற்றும் ஏனைய பொருட்கள் கொடுத்துவிட்டு வருகிறேன், அடுத்தநாள் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் போய், “எல்லாம் கிடைத்ததா?” என கேட்டுள்ளார். ஏன் இப்படி ஏமாற்றுகின்றீர்கள்?மக்களுக்கான காசை கொடுப்பதற்கு வக்கில்லை, சரியான பதிவுகளை எடுப்பதற்கு வக்கில்லை, வீட்டில் வைத்து பதிவுகளை செய்துவிட்டு கொண்டுவந்து கொடுக்கின்றீர்கள் என குற்றம்சாட்டினார்.
அநுர சிங்கமா ? மானிப்பாய் பிரதேச சபையில் கேள்வி
9