கட்டாகாலி மாடுகளால் வவுனியாவில் விபத்து

by ilankai

வவுனியாவில் உந்துருளியும் பாண் விற்பனையில் ஈடுபட்டுவந்த முச்சக்கர வண்டியும்  மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற இவ் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வவுனியா நகரில் இருந்து நெளுக்குளம் நோக்கி சென்ற உந்துருளியும், நெளுக்குளத்தில் இருந்து நகரை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.வீதியில் நின்ற கட்டாக்காலி மாடுகளே இந்த விபத்துக்கு காரணம்  என தெரிவிக்கப்படுகின்றது.விபத்தின் பின் முச்சக்கரவண்டியில் இருந்த பாண்கள் வீதியில் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவத்தில் உந்துருளி ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெளுக்குளம் காவல்துறையினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.vavuniya vavuniya nedungulam

Related Posts