Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பிரித்தானியா வல்வை நலன்புரிச் சங்கம் நடத்திய 18வது கோடை விழா நிகழ்வு பல நெருக்கடிக்கடிகள் மற்றும் பாதுகாப்புக்கள் மத்தியில் சிறப்பாக
நடந்து முடிந்தது. நிகழ்வில் பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
சிறப்பாக ஐரோப்பா தழுவிய அணிகள் விளையாட்டுகளில் பங்கெடுத்தனர். குறிப்பாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உதைபந்தாட்டம், துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், கபடி, கயிறு இழுத்தல், சிறுவர் விளையாட்டுக்கள் என பல விளையாட்டுக்கள் இடம்பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கோப்பைகளும் பணப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
பல தனியார் வணிக நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நல்வாய்புச் சீட்டைகளும் குலுக்கப்பட்டன. பரிசுகளாக தங்க நெக்ளஸ், விமானப் பயணச் சிட்டைகள் எனப் பல பரிசுகள் வழங்கப்பட்டன.
உணவுகளாக கொத்து ரொட்டி, கோழிப்புக்கை, அப்பம், கூழ், வடை, ரோல், கேக், பல வகைச் சுவையைக் கொண்ட சர்பத், குளிபானங்கள், குளிர்களி, சிறுவர்களுக்னா உணவுகள் என பல வகையான உணவுகள் சுடச் சுடச் செய்து வழங்கப்பட்டன.