உள்ளுராட்சி சபைகளது தேர்தல்கள் முடிந்து சபைகள் பதவியேற்ற பின்னர் தமது பிரதான கடமையாக வடக்கு ஆளுநரை சந்தித்து புகைப்படம் எடுப்பதனை கைக்கொண்டுள்ளன.

அவ்வகையில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை சாவகச்சேரி நகரசபையின் தவிசாளர் வ.சிறீபிரகாஸ் இன்றைய தினம் சந்தித்துள்ளார்.

இதன் போது சாவகச்சேரி நகரசபையின் ஆளணி வெற்றிடங்கள் உள்ளிட்ட தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநரோடு விரிவாக கலந்துரையாடியதோடு முடியுமானவற்றை நிறைவேற்றித் தருவதாக ஆளுநர் பதிலளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக யாழ்.மாநகரமுதல்வரும் வடக்கு ஆளுநரை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.