Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இரானுக்கும் சௌதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும் இடையிலான உறவு எப்படி மாறியுள்ளது?காணொளிக் குறிப்பு, கத்தார் தாக்குதலுக்குப் பிறகு இரானுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையேயான உறவு எப்படி மாறியுள்ளது?இரானுக்கும் சௌதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும் இடையிலான உறவு எப்படி மாறியுள்ளது?
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
கடந்த மாதம் இரான் மற்றும் இஸ்ரேல் இடையே 12 நாட்கள் மோதல் நீடித்தது. இந்த மோதலின் போது இரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, கத்தாரில் உள்ள அமெரிக்காவின் அல்-உதெய்த் ராணுவ தளத்தின் மீது இரான் தாக்குதல் நடத்தியது.
இந்த பிராந்தியத்தில் கத்தார் இரானின் நட்பு நாடாக கருதப்படுவதால் இந்தத் தாக்குதல் முன்னெப்போதும் இல்லாத வகையிலானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அல் உதெய்த் விமானத் தளத்தின் மீதான தாக்குதலை வளைகுடா அரபு நாடுகள் உடனடியாகக் கண்டித்தன. ஆனால் இந்தத் தாக்குதல் பற்றிய கண்டனங்கள் விரைவில் தலைப்புச் செய்திகளில் இருந்து மறைந்துவிட்டன.
சரி, இந்த மோதல் இரானுக்கும் முக்கிய வளைகுடா நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?
சௌதி அரேபியா
இஸ்ரேல் – இரான் மோதலுக்கும், அல் உதெய்த் தளத்தின் மீதான இரானின் தாக்குதலுக்கும் சௌதி அரேபியா காட்டிய எதிர்வினை, இரானுடனான தனது உறவைப் பேணுவதில் அது ஆர்வமாக இருப்பதைக் காட்டியது.
இரு நாடுகளுக்கும் இடையேயான தொடர்ச்சியான உயர்மட்ட சந்திப்புகளில், குறிப்பாக ஜூலை 8 அன்று நடந்த பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சிக்கும் இடையிலான சந்திப்பில் இது தெளிவாகக் காணப்பட்டது.
இஸ்ரேலுடனான போர் தொடங்கியபோது, சௌதியின் உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய ஊடக நிறுவனங்கள் இரான் மீது காட்டிய அணுகுமுறை வியக்கத்தக்க வகையில் மென்மையாக இருந்தது. சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஜூன் 13 அன்று இஸ்ரேலிய தாக்குதலை கண்டித்தார். இரானிய யாத்ரீகர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்யவும் சௌதி தலைமை உத்தரவிட்டது.
முகமது பின் சல்மான் மற்றும் இரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி சந்திப்பு குறித்து செய்தி வெளியிட்ட சௌதி ஊடகங்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை ‘சகோதரத்துவம்’ என்று வர்ணித்தன.
கத்தார்
இந்தத் தாக்குதல் இரானுடனான உறவுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதாக கத்தார் பிரதமர் கூறினார், ஆனால் உறவுகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
1979-ல் இஸ்லாமியக் குடியரசாக அறிவிக்கப்பட்டதிலிருந்து இரான் மற்றும் கத்தார் இடையேயான உறவுகள் ஒருபோதும் நிலையானதாக இல்லை.
தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளின் மூத்த அதிகாரிகளும் தொலைபேசியில் பேசினர், இது உறவுகளில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய அவர்கள் முயற்சிப்பதை காட்டியது. இரான் அதிபர் மற்றும் வெளியுறவு அமைச்சரும் இருதரப்பு மற்றும் பிராந்திய உறவுகளுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்க முயன்றனர்.
அல் உதெய்த் மீதான இரானின் தாக்குதலை உள்ளூர் ஊடகங்கள் பெரிய அளவில் செய்தி வெளியிட்டன.
இரானை இஸ்ரேல் தாக்கியதையும் கத்தார் ஊடகங்கள் விமர்சித்தன.
ஐக்கிய அரபு அமீரகம்
இஸ்ரேல் மற்றும் இரான் ஆகிய இரு நாடுகளுடனும் உறவுகளைக் கொண்ட ஒரு சில அரபு நாடுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் ஒன்று. எனவே இது ஒரு சார்பு ஆதரவை எடுப்பதை அந்நாட்டுக்கு கடினமாக்கியது.
அதிகாரப்பூர்வ மட்டத்தில், இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலையும் அதன் இறையாண்மையை மீறுவதையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடுமையாகக் கண்டித்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் இரான் அதிபருடன் தொலைபேசியில் பேசினார்.
அதே நேரம், கத்தாரில் உள்ள அல் உதெய்த் விமானத் தளத்தின் மீதான இரானிய ஏவுகணைத் தாக்குதலையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கண்டித்தது.
ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஆதரிப்பதாகவோ அல்லது அமெரிக்க ஆதரவு பெற்ற இஸ்ரேலின் பிராந்திய ஆதிக்கத்தை விரும்புவதாகவோ ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எந்த அறிகுறியையும் கொடுக்கவில்லை.
எனவே ஐக்கிய அரபு அமீரகம், இந்த பிராந்தியத்தில் அதிகார சமநிலையையும், இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனான உறவுகளையும் விரும்பும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
குவைத்
ஊடக செய்திகளின்படி, அமெரிக்க தளங்களைக் கொண்ட பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளைப் போலவே, இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் குறித்து குவைத்தும் கவலை கொண்டது. அமெரிக்க ராணுவம் குவைத்தில் பல ராணுவ தளங்களைக் கொண்டிருக்கிறது.
ஆனால் மற்ற நாடுகளைப் போலவே, குவைத்தும் இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை உடனடியாகக் கண்டித்தது. பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பல நாடுகள் சமீப ஆண்டுகளில் இஸ்ரேலுடன் ராஜீய உறவுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவதற்கு எதிராக குரல் கொடுக்கும் சில மத்திய கிழக்கு நாடுகளில் குவைத்தும் ஒன்று.
இரானுடனான குவைத்தின் உறவுகள் சமீபத்திய ஆண்டுகளில் மற்ற வளைகுடா நாடுகளை விட மேம்பட்டுள்ளன.
இருப்பினும், தோர்ரா எரிவாயு வயல் விவகாரத்தில் இரான்-குவைத் உறவு இன்னும் மோசமாகவே உள்ளது.
அது தொடர்பாக 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட சவுதி அரேபியாவிற்கும் குவைத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தை இரான் எதிர்த்தது. ஒப்பந்தத்தில் தங்களையும் சேர்த்திருக்க வேண்டும் என்று இரான் கூறுகிறது.
ஓமன்
பேச்சுவார்த்தை மூலம் மோதலை தீர்ப்பதற்கான உறுதிப்பாட்டை கொண்டிருப்பதால், பிராந்திய விவகாரங்களில் ஓமன் நடுநிலையை பேணி வருகிறது.
இந்த ஆண்டு, ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக இரான் மற்றும் அமெரிக்கா இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு ஓமன் மத்தியஸ்தம் செய்தது. 2013 ஆம் ஆண்டு ஓமன் ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தியபோது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஓமனின் மத்தியஸ்தம் தொடங்கியது. பல தசாப்தங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் உயர்மட்ட பேச்சுவார்த்தையாக இது கருதப்பட்டது.
12 நாள் மோதலின் போது, அணுசக்தி பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்ட போதும், ஓமன் தொடர்ந்து திரைக்குப் பின்னால் தனது பங்கை வகித்தது.
அமெரிக்க-இரான் மத்தியஸ்தத்தில் ஓமனின் பங்கு அரபு ஊடகங்களில் அடிக்கடி பாராட்டப்பட்டுள்ளது.
இரானுடன் ஓமன் நல்லுறவைப் பேணி வருகிறது. எனினும், கத்தாரில் உள்ள அல் உதெய்த் தளத்தின் மீதான இரானின் தாக்குதலை ஓமன் கண்டித்தது மற்றும் இது கத்தாரின் இறையாண்மையை மீறும் செயல் என ஓமன் கூறியது.
அதே அறிக்கையில், இரானின் பதிலடியைத் தூண்டிய பதட்டங்களுக்கு இஸ்ரேலை ஓமன் குற்றம்சாட்டியது.
கத்தார் மீதான இரானின் ஏவுகணைத் தாக்குதலை ஓமன் அதிகாரப்பூர்வமாக கண்டித்த போதிலும், ஓமன் ஊடகங்களில் வெளியிடப்பட்ட பல கட்டுரைகள் இரானின் தாக்குதலைத் தடுக்கும் திறனை பாராட்டி இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து விமர்சித்தன.
முழு விவரத்தையும் இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு