Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
நேரலை, ‘சோறு போடுறோம், ஆனா ஓட்டு போட மாட்டோம்’ – பாஜக தொண்டரின் பேச்சு வைரல்
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை பார்க்கலாம்.
முக்கிய சாராம்சம்நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு53 நிமிடங்களுக்கு முன்னர்’சோறு போடுறோம், ஆனா ஓட்டு போட மாட்டோம்’ – பாஜக தொண்டர்
பட மூலாதாரம், UGC
‘உங்களுக்கு ஓட்டு போட மாட்டோம் என எல்லாரும் சொல்றாங்க’ பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் அக்கட்சித் தொண்டர் ஒருவர் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விருதுநகரில் ரோசல்பட்டி சாலையில் அண்ணா சிலை அருகேபாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பூத் கமிட்டி ஆய்வுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக தொண்டர் ஒருவர், “நீங்கள் தேர்தலில் நில்லுங்கள், உங்களுக்கு சாப்பாடு கூட போடுறோம். ஆனால், ஓட்டுப் போட மாட்டோம் என்று எல்லாரும் சொல்றாங்க“ என்று நயினார் நாகேந்திரனிடம் தெரிவித்தார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத நயினார் நாகேந்திரன் அதிர்ச்சியடைந்தார். அப்போது குறுக்கிட்ட பாஜக நிர்வாகிகள், அதை பிறகு பேசிக் கொள்ளலாம் எனக் கூறி சமாளித்து அவரை திருப்பி அனுப்பினர். இந்த வீடியோ பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
54 நிமிடங்களுக்கு முன்னர்விம்பிள்டனில் இத்தாலி வீரர் முதன் முறையாக சாம்பியன்
பட மூலாதாரம், getty
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் முதல் முறையாக கைப்பற்றியுள்ளார்.
லண்டனில் நடைபெற்ற ஆடவர் ஒற்றைப் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான சின்னர், இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்று ஹாட்ரிக் பட்டத்தை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கிய அல்காரசும் பலப்பரிட்சை நடத்தினர். இருவரும் கடந்த மாதம் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதிப்போட்டியில் மோதியிருந்தனர். அதில் அல்காரஸ் வெற்றி பெற்றிருந்தார்.
முதல் செட்டை அல்காரஸ் 6-4 என்ற கணக்கில் வென்று வெற்றி பெற்றார். இதன் மூலம் அல்காரஸ் மீண்டும் வெற்றியைப் பெறப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். எனினும் சின்னர் கடந்த பிரஞ்சு ஒபபனில் செய்த தவறை இம்முறை செய்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.
ஒவ்வொரு கேமையும் நேர்த்தியாக விளையாடிய அவர் கொஞ்சம் கூட பதற்றம் இல்லாமல் அடுத்த மூன்று செட்டுகளையும் 6-4, 6-4 ,6-4 என்ற செட் கணக்கில் வென்று விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாக வென்றார். இந்த போட்டி சுமார் 3 மணி நேரம் நான்கு நிமிடம் நீடித்தது.
இந்த வெற்றியின் மூலம் விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இத்தாலி வீரர் என்ற சாதனையை சின்னர் படைத்தார்.
56 நிமிடங்களுக்கு முன்னர்சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இன்று பூமிக்கு புறப்படுகிறார் சுபான்ஷு சுக்லா
பட மூலாதாரம், Axiom Space
சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றுள்ள இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பணிகளை முடித்துக் கொண்டு இன்று பூமிக்கு புறப்படுகிறார்.
இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா மற்றும் ஆக்ஸியம்-4 பயணத்தின் 3 சக குழு உறுப்பினர்களான முன்னாள் நாசா விண்வெளி வீரர் பெக்கி விட்சன் போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி மற்றும் ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கி தங்கள் ஆய்வு பணிகளை முடித்தனர்.
அவர்கள் அனைவரும் இந்திய நேரப்படி இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலத்தில் புறப்பட்டு, சுமார் சுமார் 22 மணி நேர பயணத்திற்கு பிறகு நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணி அளவில் பசிபிக் பெருங்கடலில் வந்து இறங்குவார்கள்.
விண்வெளியில் தங்கள் கடைசி சில நாட்களின் காட்சிகளைப் பயணத்தில் 4 விண்வெளி வீரர்களும் பகிர்ந்து கொண்டனர்.
57 நிமிடங்களுக்கு முன்னர்வணக்கம் நேயர்களே!பிபிசி தமிழின் இன்றைய (ஜூலை 14) நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம்.