குருணாகல் மாவட்டத்தில் மஹவ காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைதுசெய்வதற்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.சந்தேக நபர் மஹவ பகுதியில் உள்ள நான்கு பிற்பனை நிலையங்களின் கதவுகளை உடைத்து திருடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். திருட்டு சம்பவம் இடம்பெற்ற விற்பனை நிலையத்தின் சிசிரிவி கமராவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் உள்ள சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் காவல்துறைக் குற்றப் புலனாய்வு பிரிவின் 037 – 2260008 அல்லது 071 – 8596411 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
திருடனைப் பிடிக்க உதவி கோரல்
5