🚨 புயலால் பாதிக்கப்பட்ட நெடுந்தீவு கடற்றொழிலாளர்கள் வாழ்வாதார கோரிக்கை! டித்வா புயலின் தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட நெடுந்தீவு கடற்றொழிலாளர்கள், தமக்கான வாழ்வாதார உதவிகளைப் பெற்றுத்தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரனின் 10 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவில் நிர்மாணிக்கப்பட்ட கடற்றொழிலாளர் சங்க கட்டடம் நேற்று (திங்கட்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினரால் திறந்து வைக்கப்பட்டது. கட்டடத் திறப்பு விழாவைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினருடன் கடற்றொழில் சங்கம் மற்றும் சமாசங்களைச் சேர்ந்தவர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்கள் மற்றும் தேவைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினர். அப்போது, டித்வா புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு உடனடி உதவிகளைப் பெற்றுத்தருமாறு அவர்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசி உரிய தீர்வை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் உறுதியளித்தார். #நெடுந்தீவு #கடற்றொழிலாளர்கள் #புயல்பாதிப்பு #டித்வாபுயல் #வாழ்வாதாரஉதவி #கோரிக்கை #சிறிதரன் #நாடாளுமன்றஉறுப்பினர் #மீனவர்நலன் #புனரமைப்பு #Neduntheevu #Fishermen #CycloneRelief
🚨 புயலால் பாதிக்கப்பட்ட நெடுந்தீவு கடற்றொழிலாளர்கள் வாழ்வாதார கோரிக்கை! – Global Tamil News
3