Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பிரபாகரனின் ஆயுதங்கள் தான் கொள்கலன்களில் இருந்ததாக பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு குறிப்பிட்டார்கள். இது உண்மையாயின் ஏன் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலமளிக்க அச்சமடைய வேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
323 கொள்கலன்கள் விடுவிப்புக்கு நான் அனுமதி வழங்கியதாக குறிப்பிடும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கிறேன்.
கடந்த ஜனவரி மாத காலப்பகுதியில் இந்த கொள்கலன்கள் மேல் மாகாண ஆளுநருடையது என்று அனைவரும் குறிப்பிட்டார்கள். பாராளுமன்றத்தில் அதை குறிப்பிட்டு கூச்சலிட்டார்கள்.
இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக ஆளுநர் நடவடிக்கை எடுத்ததன் பின்னர் தற்போது அவ்வாறு குறிப்பிடவில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.
ஐந்து மாதங்களுக்கு பின்னர் இந்த கொள்கலன்களை நான் விடுவித்ததாக குறிப்பிட்டார்கள். நான் விடுவித்திருந்தால் நீதிமன்றத்துக்கு செல்லுங்கள், வழக்குத் தாக்கல் செய்யுங்கள்.
பிரபாகரனின் ஆயுதங்கள் தான் கொள்கலன்களில் இருந்ததாக பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்து கொண்டு குறிப்பிட்டார்கள்.
இது உண்மையாயின் ஏன் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலமளிக்க அச்சமடைய வேண்டும்.என கேள்வி எழுப்பினார்.