தண்டவாளம் அருகே குட்டியை ஈன்றெடுத்த தாய் யானை – 2 மணிநேரம் காத்திருந்த ரயில்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ப்பிணி யானை ஒன்று ரயில் தண்டவாளம் அருகே பிரசவ வலியில் தவிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. ஜூன் கடைசி வாரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

உள்ளூர் அதிகாரிகள் ரயில்வேக்கு அளித்த தகவலின்பேரில் யானை தனது குட்டியை ஈன்றெடுப்பதற்காக இரண்டு மணிநேரம் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. குட்டியை ஈன்றெடுத்த யானை சிறிது நேரத்தில் தனது குட்டியோடு அங்கிருந்த கிளம்பிச் சென்றது.

மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் இந்த காணொளியைப் பகிர்ந்து வனத்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகளின் நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு