Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
நல்லூர் பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பிலான கோரிக்கை மனு ஆளூனரிடம் கையளிப்பு
வடமாகாண ஆளுநரை நேரில் சந்தித்து, நல்லூர் பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பிலான கோரிக்கை மனுவை தவிசாளர் தலைமையிலான குழுவினர் கையளித்துள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை, நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தலைமையிலான உறுப்பினர்கள் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை சந்தித்து கலந்துடையாடினார்கள்
அதனை தொடர்ந்து நல்லூர் பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பிலான கோரிக்கை மனுவையைக் கையளித்த தவிசாளர், திண்மக் கழிவகற்றல் தொடர்பாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆளுநருக்கு தெரியப்படுத்தினார்.