உக்ரைன் 600 தடவை இரசாயணத் தாக்குதல்களை நடத்தியது: ரஷ்யா பரபரப்புக் குற்றச்சாட்டு

உக்ரைன் 600 தடவை இரசாயணத் தாக்குதல்களை நடத்தியது: ரஷ்யா பரபரப்புக் குற்றச்சாட்டு

by ilankai

ரஷ்யா – உக்ரைன் மோதலில்  உக்ரைன் இரசாயன ஆயுதங்ளை பயன்படுத்தி உள்ளது என ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளது. குளோரோபிக்ரின், சி.எஸ். வாயு, பிரஸ்சிக் அமிலம் உள்பட பல்வேறு ரசாயன பொருட்களை கொண்டு 600-க்கும் மேற்பட்ட முறை உக்ரைன் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. படுகொலை முயற்சிகளிலும் ஈடுபட்டு உள்ளன என அந்நாட்டின் உயரதிகாரியான அலெக்சி டிஸ்சேவ் செய்தியாளர்களிடம் கூறினார்.உக்ரைனில் உள்ள இரசாயன மற்றும் அணு ஆயுத அமைப்புகளுக்கும் கூட அச்சுறுத்தல்கள் உள்ளன என குறிப்பிட்ட அவர், அவை தீங்கு விளைவிக்கும் ஆபத்துகளும் உள்ளன என கூறினார். இரசாயன ஆயுத தாக்குதலுக்காக ஆளில்லா விமானங்கள் மற்றும் வெடிபொருட்களையும் உக்ரைன் பயன்படுத்தியது. தீங்கு ஏற்படுத்தும் தலங்களை உக்ரைனின் உயரதிகாரிகள் தவறாக பயன்படுத்தி உள்ளனர் என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறினார்.எனினும், இதற்கு உக்ரைன் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் உடனடியாக வெளியிடப்படவில்லை. 

Related Posts