Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மூன்று நபர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதான சந்தேக நபர்கள் 72 மணி நேரம் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிள்ளையானின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படுகிறது. கொலைகள் மற்றும் கடத்தல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவர் நேற்று கல்முனை பகுதியில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்படடுள்ளார்.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இனிய பாரதி என்றும் அழைக்கப்படும் கே. புஸ்பகுமார் மற்றும் சிவலிங்கம் தவசீலன் என்ற மற்றொரு நபர் ஆகியோர் நேற்றுமுன்தினம்; கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல கொலை வழக்குகள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக, பிள்ளையானிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது.
கொலை வழக்குகள் தொடர்பான விசாரணைகள் குறித்து, பிள்ளையானிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த இரகசிய தகவல்களைத் தொடர்ந்து கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்..