Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
யாழ்.வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் விசேட அமர்வு இன்று சபையின் தவிசாளர் தியாகராசா பிரகாஸ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது சபையின் தீர்மானங்களுக்கு மாறாக, தவிசாளருக்கும் தெரிவிக்காமல் செயலாளர் தன்னிச்சையாக செயல்படுவதாக உறுப்பினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
இதனால் சபையின் ஆரம்பத்தில் குழப்பமான நிலை ஏற்பட்டதை அடுத்து தவிசாளரால் சபை அமர்வு 20 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் சபை அமர்வுகள் ஆரம்பமானது.
இதன்போது சபையின் செயலாளர் சபை தீர்மானங்களுக்கு எதிராக செயல்படுவதாக உறுப்பினர்கள் மீண்டும் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அத்தோடு சபையில் கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெற்ற ஊழல் தொடர்பில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என செயலாளரிடம் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
மேலும் தான் சொல்வதை கேட்காவிட்டால் நீங்கள் வெளியேறுங்கள் என தவிசாளர் செயலாளரிடம் தெரிவித்தார். அத்தோடு சபை தீர்மானத்தின் படி நேர்த்தியான ஒழுங்குகளில் மீள சாரதிகள் பணிக்கு அமர்த்தப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டு தவிசாளரால் அறிவிக்கப்பட்டது.
இறுதியாக பிரதேச சபையின் உப குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்கான தலைவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இதன்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கிடையில் தலைவர் பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.
அந்த வகையில் நிதி குழு மற்றும் பெறுகைக் குழுவின் தலைவராக சபையின் தவிசாளரும், திட்டமிடல் குழுவின் தலைவராக செல்வராசா கஜேந்திராவும், சுகாதாரக் குழுவின் தலைவராக தவராசா துவாரகனும், மயான அபிவிருத்தி குழுவின் தலைவராக வரதராஜா தனகோவியும், சனசமூக நிலைய ஒருங்கிணைப்பு மற்றும் அபிவிருத்தி குழுவின் தலைவராக குணராஜா டெனிஸ் கமல்ராஜ் , மகளிர் மற்றும் சிறுவர் குழுவின் தலைவராக சின்னராசா ரஜீபாவும் தெரிவு செய்யப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.