Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர்களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற்கான உதவித் தொகையானது யாழ். மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனால் வழங்கி வைக்கப்பட்டது.
மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற இந் நிகழ்வில் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ந. தயாபரன், அபிவிருத்தி உத்தியோகத்தர் வைலட் நிக்லஸ் மற்றும் OfERR (Ceylon) இணைப்பாளர் இ. பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
UNHCR நிறுவனத்தால் OfERR (Ceylon) நிறுவனத்தால் 90 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை தலா ஒருவருக்கு வழங்கப்பட்டது.
அந்த வகையில், சாவகச்சேரி, நல்லூர் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் மீளத் திரும்பிய 05 குடும்பங்களைச் சேர்ந்த எட்டுப் பேருக்குமாக ரூபா 7இலட்சத்து 20, ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டது.